தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கேள்வி

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கேள்வி

20-9-2011 அன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் .கே.எம்.காதர் மொகிதீன் ,

கலைஞர் முதல்வராக இருந்தபோது கடந்த 26-2-2011-ல் ஒரு அரசு ஆணை பிறப்பித்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள 965 தனியார் பள்ளி களின் 4,851 ஆசிரியர் பணியிடங்கள், 648 ஆசிரி யர் அல்லாத பணியிடங் கள் ஆக மொத்தம் 5499 பணியிடங்களை அனும தித்து 1-6-2011 முதல் நடை முறைப்படுத்துவதாகவும், இதனால் ஆண்டுக்கு 131 கோடியே 13 லட்சம் கூடுதல் செலவாகும் என் றும் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், 1990-91-ம் ஆண்டுவரை தொடங்கப் பட்ட 476 சிறுபான்மை, 467 சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளுக்கு கூடுதலாக தேவைப்படும் 6456 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியி டங்ககளையும் அரசு ஏற்கும் என அறிவித்து அதற்கும் ஆண்டுக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்படும் என கலைஞர் அறிவித்திருந் தார்.

ஆனால், இந்த அரசு ஆணை ஜூன் மாதம் அமல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டி ருப்பது மிகப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி யுள்ளது. எனவே, இதை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

சமச்சீர் கல்வியில் உர்தூ, மலையாளம், தெலுங்கு, கன்னடம், அரபி உள்ளிட்ட சிறுபான்மை மொழிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சிக் கான மதிப்பெண்களும் வழங்கப்படும் என தி.மு.க. ஆட்சியில் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போதைய அ.இ.அ.தி.மு.க. அரசு இந்த அரசு ஆணையை எந்த பள்ளிக்கும் அனுப்ப வில்லை என்பதோடு இதுபற்றி எத்தகையஉத்தரவும் பிறப்பிக்க வில்லை. இதனால் அப்பள்ளி நிர்வாகங்கள் எல்லாம் இது விஷயத்தில் செய்வதறியாது திகைத்துள்ளன.

இதுபற்றி முதல்வர் ஜெயலலிதா தமது அரசின் நிலைப்பாட்டை தெரி விக்க வேண்டும்.

நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் திட்ட மிட்ட அரசியல் தந்திரம். இந்த உண்ணாவிரதத்தால் காந்திஜியின் உண்ணா விரதம் கொச்சைப்படுத்தப் பட்டுள்ளது. குஜராத் கலவரத்தில் 992 முஸ்லிம் கிராமங்கள் முற்றிலுமாக தரைமட்டமாக்கப்பட்டதாக வும், 660 பள்ளிவாசல்கள், மதரஸாக்கள், தர்காக்கள் முற்றிலுமாக தகர்க்கப் பட்டதாகவும் அன்றைய ஆங்கில நாளிதழ்கள் பர பரப்பாக செய்தி வெளி யிட்டிருந்தன.

ஆனால், இதில் எது ஒன்றையாவது புதுப்பித்து கட்டித் தந்து, அல்லது தகர்க்கப்பட்ட கிராமங் கள் ஒன்றில் முஸ்லிம்களை குடியேற்ற வைத்து விட்டு மோடி இந்த உண்ணா விரதத்தை நடத்தியிருந் தால் பாராட்டியிருக்க லாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.

அப்படியிருந்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதா Viagra online அவருடைய உண்ணா விரதத்தை ஆதரித்து தன் னுடைய எம்.பி.க்களை அனுப்பினார். கொள்கை யால் நாங்கள் ஒத்துப் போகின்றவர்கள் என்பதை அவர் பகிரங்கமாக அறி வித்துள்ளார்.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் இவை களையெல்லாம் சிந்தித்துப் பார்த்து தங்களது உணர்வு களை பிரதிபலிப்பார்கள்.இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறினார் .

தகவல் : நல்லூரான்

Add Comment