வங்கி உதவியாளர் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி

இந்திய அளவில் நடைபெறும் வங்கி உதவியாளர் பணிக்கான பொதுத் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கான இலவசப் பயிற்சியை சைதப் துரைசாமியின் மனித நேய கல்வியகம் அளிக்கிறது.

சைதை துரைசாமியின் மனித நேய கல்வியகம், ஐஏஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் பணிகள் உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது.

அதுபோல, அகில இந்திய அளவில் வரும் நவம்பர் மாதம் 27ம் தேதி நடைபெறும் வங்கி உதவியாளர் பணிக்கான பொதுத் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு மனிதநேய கல்வியகம் சார்பில் இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பயிற்சி புத்தகம், குறிப்புகள், கையேடுகள், செய்தித்தாள்கள், நூலக வசதி, இணையதள வசதி போன்ற பல்வேறு பயிற்சிகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 21ம் தேதி முதல் Buy Cialis Online No Prescription href=”http://www.saidais.com”>www.saidais.com என்ற இணையதளத்தின் வாயிலாகவும், மனிதநேய கல்வியக அலுவலகத்தில் நேரில் வந்தும் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Add Comment