காங்கிரஸ் ஆதரிக்குமா? கலைஞர் பதில்!

தி.மு.க. தலைவர் கலைஞர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் (21.09.2011) நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி:  முதல் அமைச்சர் ஜெயலலிதா, கூடங்குளம் போராட்டக் குழுவினரின் கோரிக்கைபடி, அமைச்சரவையில் தீர்மானம் கொண்டு வர ஒப்புக் கொண்டதையடுத்து, Lasix No Prescription அங்கே உண்ணாவிரதம் இருந்தவர்கள் வாபஸ் பெற்றுக் கொண்டதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:  இது ஒரு நல்ல செய்தி. அங்கே உள்ள மக்கள் எண்ணியவாறு, எல்லா வகையிலும் ஆக்கப்பூர்வமான நன்மைகள் ஏற்பட துணை நிற்க அந்த மக்கள் முன்வரும்போது அவர்கள் ஏமாற்றம் அடையாமல் இப்போது அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழிகளைக் காப்பாற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.

கேள்வி:  திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் உங்களை ஆதரிக்குமா?

பதில்:  எனக்கு தெரியாது.

கேள்வி:  மோடி உண்ணாவிரதம் இருந்ததைப் போல, அத்வானி ஊழலுக்கு எதிராக யாத்திரை மேற்கொள்ளப் போவதாக சொல்லப்பட்டுள்ளதே?

பதில்:  இந்தியாவில் யார் வேண்டுமானாலும் உண்ணாவிரதம் இருக்கலாம். லட்சக்கணக்கான ஏழை மக்கள் இப்போது தொடர்ந்து இருக்கிற உண்ணாவிரதத்தை நீக்குவதற்கு, இந்த உண்ணாவிரதங்கள் பயன்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இவ்வாறு கலைஞர் கூறினா

Add Comment