அ.தி.மு.க. வேட்பாளர்கள் மாற்றம்: ஜெ. அறிவிப்பு

காஞ்சீபுரம் மத்திய மாவட்டம், வேலூர் மாநகர், கோவை புறநகர், நீலகிரி, தஞ்சாவூர் தெற்கு, திருவாரூர், Buy cheap Bactrim தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில நகராட்சிகளில் தலைவர் பதவிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். காஞ்சீபுரம் மத்திய மாவட்டத்தில் செங்கல்பட்டு நகராட்சி புதிய வேட்பாளராக சி.வி.என்.குமாரசாமி (நகர அ.தி.மு.க. செயலாளர்) நியமிக்கப்பட்டு உள்ளார்.

 

இதேபோல், காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டம், வேலூர் புறநகர், கடலூர் மேற்கு, விழுப்புரம் தெற்கு, தருமபுரி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஒருசில பேரூராட்சிகளில் தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டத்தில் சிட்லபாக்கம் பேரூராட்சி புதிய வேட்பாளராக ஆர்.மோகன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த தகவலை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா நேற்று இரவு வெளியிட்டார்

Add Comment