கே.என்.நேரு மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதாமே? கலைஞர் பதில்

தி.மு.க. தலைவர் கலைஞர் (21.09.2011) வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேள்வி: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதாமே?

பதில்: இதே போல் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது பொய் வழக்கு ஒன்றினை பதிவு செய்து கைது செய்தார்கள். அந்த வழக்கிலே நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் பெற்று விடுதலை ஆகின்ற நேரத்தில் கடந்த ஜுன் மாதம் 5 ந் தேதி திருவாரூரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் என்னுடன் பங்கேற்று அவர் பேசினார். அப்போது முதலமைச்சரை தாக்கி பேசியதாக செப்டம்பர் 15 ந் தேதியன்று அவதூறு வழக்கு என்று பதிவு செய்து சிறை வாசலிலேயே கைது செய்திருக்கிறார்கள். அது வெறும் அவதூறு வழக்குதான். அதிலே கூட அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. அவர் முதலமைச்சரைத் no prescription online pharmacy தாக்கி பொதுக்கூட்டத்தில் பேசினார் என்று வழக்கு. ஆனால் சட்டப் பேரவையிலேயே முதலமைச்சரும், அமைச்சர்களும் கூறிய அவதூறான அர்ச்சனைகளுக்கெல்லாம் மக்கள்தான் தக்க தீர்ப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

Add Comment