கூடங்குளம் பிரச்னையில் மக்களுக்கு அளித்த உறுதியை அரசு காப்பாற்ற வேண்டும்

சென்னை : கூடங்குளம் பிரச்னையில் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழிகளை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கருணாநிதி கூறினார். திமுக தலைவர் கருணாநிதி, நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: முதல்வர் Buy Amoxil ஜெயலலிதா கூடங்குளம் போராட்டக் குழுவினரின் கோரிக்கைப்படி அமைச்சரவையில் தீர்மானம் கொண்டு வர ஒப்புக் கொண்டதையடுத்து, அங்கே உண்ணாவிரதம் இருந்தவர்கள் வாபஸ் பெற்றுக் கொண்டது பற்றி உங்கள் கருத்து என்ன?

இது ஒரு நல்ல செய்தி. அங்கே உள்ள மக்கள் எண்ணியவாறு, எல்லா வகையிலும் ஆக்கப்பூர்வமான நன்மைகள் ஏற்பட, துணை நிற்க, அந்த மக்கள் முன்வரும் போது அவர்கள் ஏமாற்றம் அடையாமல் இப்போது அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழிகளை காப்பாற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பு ஏற்க வேண்டும்.
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் உங்களை ஆதரிக்குமா?

எனக்கு தெரியாது.  நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருந்தது போல, ஊழலுக்கு எதிராக அத்வானி யாத்திரை மேற்கொள்ளப் போவதாக சொல்லப்பட்டுள்ளதே?
இந்தியாவில் யார் வேண்டுமானாலும் உண்ணாவிரதம் இருக்கலாம். லட்சக்கணக்கான ஏழை மக்கள் இப்போது தொடர்ந்து இருக்கிற உண்ணாவிரதத்தை நீக்குவதற்கு இந்த உண்ணாவிரதங்கள் பயன்பட வேண்டும் என்பது தான் என் விருப்பம். இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

Add Comment