ராஜஸ்தானில் மஸ்ஜிதுக்குள் துப்பாக்கி சூடு , 9 முஸ்லிம்கள் மரணம் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடும் கண்டனம்

ராஜஸ்தானில் மஸ்ஜிதுக்குள் துப்பாக்கி சூடு , 9 முஸ்லிம்கள் மரணம் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடும் கண்டனம்

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள கோபல்கார் கிராமத்தில் கடந்த 14ம் தேதி பள்ளிவாசலுக்குள் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 9 முஸ்லிம்கள் உயிர் ழந்துள்ளனர். இதற்கு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு காரண மானவர்கள் மீது முதல் தக வல் அறிக்கை பதிவு செய்யப் பட வேண்டும்; உயிரிழந்தவர் களின் குடும்பத்திற்கு உத வித்தொகையை அதிகரித் துத்தர வேண்டும் என ராஜஸ் தான் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதுபற்றி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினரு மான ஷமீம் அஹ்மது தெரிவித்ததாவது:

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள கோபல்கார் கிராமத் தில் கபரஸ்தான் நிலம் தொடர்பாக கடந்த 42 ஆண்டுகளாக முஸ்லிம் களுக்கும் குஜ்ஜார் இனத் தைச் சேர்ந்தவர்களுக்கும் தாவா இருந்து வந்துள்ளது. கடந்த 14ம் தேதி இரு தரப்பினருக்குமிடையே மோதல் முற்றிய நிலையில் முஸ்லிம்கள் அங்குள்ள பள்ளிவாசலில் அடைக் கலம் புகுந்துள்ளனர்.

அவர்கள் மீது, குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்தவர்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடு பட்டுள்ளனர். பதிலுக்கு முஸ்லிம்கள் தரப்பிலிருந் தும் தாக்குதல் நடைபெற் றுள்ளது.

கலவரத்தை அடக்க காவல்துறையினர் துப் பாக்கி சூடு நடத்தியுள்ள னர். இதில், 9 முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளனர். முஸ்லிம்களை குறி வைத்து தாக்கப்பட்ட இந்த தாக்குதல் ராஜஸ்தான் முழுவதும் பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தியுள் ளது. Buy cheap Doxycycline இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை

மாவட்ட ஆட்சி தலை வரை சந்தித்த இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் தூதுக் குழுவினர் இச்சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண் டும் என்றும், உயிரிழந்த குடும்பங் களுக்கு நிவாரண தொகை அதிகப்படுத்தி தர வேண் டும் என்றும்,

துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண் டும் என்றும், ராஜஸ்தான் மாநிலத்தில் கண்டபடி வழங்கப்பட்டுள்ள துப் பாக்கி உரிமங்களை ரத்து செய்து அவைகளை பறி முதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத் தனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், காவல் துறை மாவட்ட கண் காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்ட னர்.

இறந்தவர்களின் குடும் பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் மாநில அரசால் நஷ்ட ஈடாக உடனடி யாகத்தரப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் ஒரு சாரார் மட்டுமே இறந் தனர் என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு தருமசங்கடம் ஏற்பட்டது. எனவே சம்ப வம் குறித்து சி.பி.ஐ. விசா ரணைக்கு உத்தரவிடப் பட்டது.

தகவல் : எஸ்.கே.எம். ஹபிபுல்லா 

Add Comment