தேர்தல் நடத்தை விதி அமல்:அரசு கார்களை ஒப்படைத்தனர்

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 17, 19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. சென்னை மாநகராட்சிக்கு அக்டோபர் 17-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமுலுக்கு வந்துவிட்டன.

சென்னை மாநகராட்சியில் மேயர், துணை மேயர், ஆளுங்கட்சி தலைவர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கு அரசு கார்கள் வழங்கப்பட்டு இருந்தன.

இந்த கார்களைதான் அவர்கள் அலுவலகப்பணிக்கு பயன்படுத்தி வந்தனர். தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்துவிட்டதால் மேயர் மா. சுப்பிரமணியன், துணை மேயர் சத்யபாமா, ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், Cialis No Prescription எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி ஆகியோர் தாங்கள் பயன்படுத்தி வந்த அரசு கார்களை மாநகராட்சியிடம் ஒப்படைத்து விட்டனர்.

இதேபோல் 155 கவுன்சிலர்களுக்கு தங்களது வார்டுகளில் அலுவலகம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அவர்களும் தங்கள் அலுவலகங்களை காலி செய்து வருகிறார்கள்
.

Add Comment