உள்ளாட்சி மன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல்

சில கட்சிகள்-எங்களுடன் ஏற்கனவே உறவாக இருந்த சில கட்சிகள் இந்த தேர்தல் நேரத்தில் அதிகாரப்பூர்வமாக கூட்டணியை நாங்கள் அமைக்காவிட்டாலும், ஆங்காங்கு வாய்ப்புகளுக்கேற்றவாறு தொகுதி பங்கீடு செய்து கொள்வார்கள் : திமுக தலைவர் கலைஞர்
உள்ளாட்சி மன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை வெளியிட்டு, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:-இன்னும் எத்தனை இடங்களுக்கான வேட்பாளர்கள் பாக்கியுள்ளன?
பதில்:-நீதிமன்ற தீர்ப்பு காரணமாக திருச்சி மாநகராட்சிக்கான தேர்தல் தற்போது நடைபெறவில்லை. அது தவிர 7 மேயர்களுக்கு தற்போது வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சேலம், மதுரை மாநகர்களுக்கான மேயர் வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள்.
கேள்வி:-இந்த தேர்தலில் எதை முன்நிறுத்தி உங்கள் தேர்தல் பிரசாரம் இருக்கும்?

பதில்:-உள்ளாட்சி மன்றங்களின் முன்னேற்றத்தை மக்களுடைய அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதை முக்கிய குறிக்கோளாகவைத்து தேர்தலில் நிற்கிறோம்.
கேள்வி:-விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தி.மு.க.கூட்டணியில் நாங்கள் நீடிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறாரே?
பதில்:-சில கட்சிகள்-எங்களுடன் ஏற்கனவே உறவாக இருந்த சில கட்சிகள் இந்த தேர்தல் நேரத்தில் அதிகாரப்பூர்வமாக கூட்டணியை நாங்கள் அமைக்காவிட்டாலும், ஆங்காங்கு வாய்ப்புகளுக்கேற்றவாறு தொகுதி பங்கீடு செய்து கொள்வார்கள்.
கேள்வி:-இது காங்கிரசுக்கும் பொருந்துமா?
பதில்:-எல்லோருக்கும் பொருந்தும்.
கேள்வி:-காங்கிரஸ் கட்சியை விட்டு தனியாக நிற்போம் என்று நீங்கள் அறிவித்த பிறகு, அந்தக்கட்சியின் ஒரு சில தலைவர்கள் அதற்காக மகிழ்ச்சி அடைகிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்களே?
பதில்:-மகிழ்ச்சி இருபக்கமும் இருக்கிறது.
கேள்வி:-அ.தி.மு.க. கூட்டணியில் இன்னும் ஒரு முடிவான நிலையை அடையவில்லை. அங்கிருந்து சில கட்சிகள் வெளியேறினால், அவர்கள் இங்கே வந்து சேர வாய்ப்பு இருக்கிறதா?
பதில்:-அப்படி இருப்பதாக தெரியவில்லை.   கேள்வி:-பிரணாப் முகர்ஜி, பிரதமருக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையிலே எழுதியதாக சொல்லப்படுகிற கடிதத்தில், அலைக்கற்றை பிரச்சினை மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு தெரியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதைத்தான் முன்பு ஆ.ராசாவும் சொன்னார். தற்போது இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தி.மு.க.தரப்பில் தவறு இல்லை என்று சொல்கிறீர்களா?
பதில்:- இந்த பிரச்சினை நீதிமன்றத்திலே விசாரணையில் இருக்கிறது. இது குறித்து விரிவாகப்பேசுவது நல்லதல்ல.
கேள்வி:-2ஜி அலைக்கற்றை பிரச்சினையில் பிரணாப் முகர்ஜி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்:-அப்படி ஏதாவது இருந்தால், அவர் எடுக்க வேண்டிய முடிவு அது.
கேள்வி:-இந்த வழக்கை நடத்துவது சி.பி.ஐ. நிறுவனம், அந்தத்துறையின் அமைச்சராக ப.சிதம்பரம் நீடிப்பது சரியா?
பதில்:-நான் இந்த பிரச்சினைக்கு விரிவாக பதில் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் முழுமையான விவரம் எதுவும் கிடைக்காமல், இப்போது இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வது நல்லதும் அல்ல. அர்த்தமும் கிடையாது.
கேள்வி:-பிரணாப் முகர்ஜி பிரதமருக்கு எழுதியதாக சொல்லப்படும் தகவல் ஏற்கனவே ராசா பலமுறை கூறியதை உறுதிப்படுத்துவது போல் இருக்கிறதே?
பதில்:-அவருக்கு தெரிவித்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
ஒவ்வொரு முறையும் இந்த 2ஜி ஒப்பந்தங்கள் பேசப்பட்ட போதும், முடிவு செய்யப்பட்ட போதும் அவர்களோடு கலந்து பேசியிருக்கிறேன். அவர்களுக்கும் தெரியும் என்ற அர்த்தத்தில்தான் சொல்லியிருக்கிறார்.
கேள்வி:-மத்தியில் காங்கிரசுடனான உங்கள் கூட்டணி தொடருகிறதா?
பதில்:-தொடருகிறது. மத்தியில் காங்கிரசுடன் கூட்டணி நீடிக்கிறது. வேட்பாளர் அறிவிப்பதில் சங்கடம்
கேள்வி:- Buy Lasix உள்ளாட்சி மன்ற தேர்தல்கள் நேர்மையாக இந்த சூழ்நிலையில் நடத்தப்படும் என்று எண்ணுகிறீர்களா?
பதில்:-நடத்தப்படும் என்று, “அய்யர்” சொல்லியிருக்கிறார். “அய்யர்” என்றால் தேர்தல் ஆணையரின் பெயர்.
கேள்வி:-எந்தெந்த தொகுதிகள் தனி தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் பெண்களுக்கான தொகுதிகள் என்றெல்லாம் அறிவிக்கப்படவில்லை. இதனால், வேட்பாளர்களை அறிவிப்பதில் சங்கடம் ஏற்படுமல்லவா?
பதில்:- முன்பே இதை சொல்லியிருக்கிறேன்.
இதனால் தி.மு.க. உள்ளிட்ட எல்லா கட்சிகளுக்கும் மிகப்பெரிய சங்கடத்தை உண்டாக்கிய காரியம் இது. ஏனென்றால் எந்தத் தொகுதி தனித்தொகுதி, எந்தெந்த தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. எந்தெந்த தொகுதிகள் பொதுத் தொகுதிகள் என்று தெரியாமல் இந்தப்பட்டியலை உங்களிடம் கொடுக்கிற வரையில் நாங்கள் மிகுந்த கஷ்டப்பட்டிருக்கிறோம்.
கேள்வி:-உள்ளாட்சி மன்ற தேர்தல்கள் இரண்டு கட்டமாக நடப்பதால் முறைகேடுகளுக்கு அது வழிவகுக்கும் என்று டாக்டர் ராமதாஸ் சொல்லுகிறாரே?
பதில்:-பல தேர்தல்கள் பல நேரங்களில் உள்ளாட்சி மன்றங்களுக்கு மாத்திரமல்ல. சட்டமன்றங்கள், பாராளுமன்றங்களுக்குக்கூட இரண்டு கட்டமாக தேர்தல்கள் நாட்டில் நடைபெற்றிருக்கின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் டாக்டர் ராமதாஸ் சொல்வது போல சில பிரச்சினைகள், சங்கடங்கள் இதனால் ஏற்படும் என்பதையும் நாம் மறுப்பதற்கு இல்லை.
கேள்வி:-டாக்டர் ராமதாஸ் பேசும்போது, திராவிட கட்சிகளோடு தாங்கள் கூட்டணியே வைக்கமாட்டோம் என்று இழிவாக பேசியிருக்கிறாரே?
பதில்:-மற்ற கட்சிகளை பற்றி இழிவாக பேசுவது, அதிலும் குறிப்பாக திராவிட கட்சிகளைப்பற்றி, தி.மு.க.வைப்பற்றி டாக்டர் ராமதாஸ் இழிவாக பேசுவது என்பது புதிதல்ல. அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை. இவ்வாறு கருணாநிதி பதில் அளித்தார்.
பேட்டியின்போது, தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர்.
 தகவல் : நல்லூரான்

Add Comment