திருச்சியில் ரூ.10 கோடி நகை மற்றும் பணம் சிக்கியது; வருமான வரித்துறை விடிய, விடிய விசாரணை:

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 13-ந்தேதி நடக்கிறது. தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அதிகாரிகள் தலைமையில் பறக்கும்படை அமைக்கப்பட்டு உள்ளது. பறக்கும்படை அதிகாரிகள் கருப்பையா, ரெங்கராஜ் மற்றும் குழுவினர் தினமும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவும் திருச்சியில் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி-திண்டுக்கல் ரோட்டில் உள்ள கருமண்டபம் சோதனைச்சாவடி எண்1-ல் நேற்று இரவு 11.30 மணிக்கு பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி, ஏட்டுகள் தங்கசாமி, ரவி ஆகியோர் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது திண்டுக்கல்லில் இருந்து மின்னல் வேகத்தில் வந்த ஒரு காரை அதிகாரிகள் நிறுத்தினர். காரில் இருந்தவர்களிடம் சோதனை நடத்த போவதாக கூறினார். அந்த காரில் பயணம் செய்த 2 பேரையும் காரில் இருந்து இறங்குமாறு அதிகாரிகள் கூறினர்.

பின்னர் காரை முழுவதுமாக சோதனை போட்டனர். அப்போது காரில் 3 பைகள் இருந்தது. அந்த பைகளில் கட்டுகட்டாக ரூபாய் நோட்டுக்கள், தங்க நகைகள் இருந்தது. இதைப்பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் மொத்தம் ரூ.40 லட்சம் பணமும், 34 கிலோ (8,080 பவுன்) எடை கொண்ட தங்க நகைகளும் இருந்தன. நகைகளின் மதிப்பு ரூ.9 1/2 கோடி ஆகும்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஜெயஸ்ரீ, உதவி கலெக்டர் சம்பத் ஆகியோரும் விரைந்து வந்தனர். இதையடுத்து அதிகாரிகள் அந்த காரை திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். காரில் வந்த நபர்களிடம் அதிகாரிகள் Bactrim No Prescription துருவி, துருவி விசா ரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் பெயர் ரமேஷ் மற்றும் ரவிச்சந்திரன் என்றும் திருச்சி பெரிய கடைவீதியில் அங்காளம்மன் கோவில் அருகே பிரபல நகை கடை நடத்தி வருவதாகவும் கூறினர். அடிக்கடி நகைகளை செய்து தேனி, காரைக்குடி, திண்டுக்கல் பகுதிகளில் சென்று கடைகளில் விற்று வருவது வழக்கம் என்றும், தேனிக்கு சென்று நகைகளை விற்று விட்டு திருச்சிக்கு திரும்பி வருவதாகவும் கூறினார்.

ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருப்பதால் ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை, பணம் எடுத்துச்செல்லக்கூடாது என்று விதியை அதிகாரிகள் கூறினர். மேலும் அந்த நகை, பணத்துக்கு உரிய ரசீதுகள் ஆவணங்களை காட்டும்படி கூறினர். ஆனால் காரில் வந்த 2 பேரும் ஆவணங்களை ஒப்படைக்கவில்லை,

எனவே தேர்தலின் போது வாக்காளர்களுக்கு கொடுக்க நகை-பணம் எடுத்து வரப்பட்டதா? என அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் விடிய, விடிய விசாரணை நடந்தது. பிறகு அவர்களை திருச்சி வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கைப்பற்ற 34 கிலோ தங்க நகைகள், ரொக்க பணம் ரூ.40 லட்சம் ஆகியவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

நகைக் கடை அதிபர்கள் பணம், நகைக்கான உரிய ஆவணங்களை அளிக்க வேண்டும் என்றும் அவற்றை தணிக்கை செய்த பிறகே அவை திருப்பி ஒப்படைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே சட்டமன்ற தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பஸ்சில் கடத்தப்பட்ட ரூ.5? கோடி பணத்தை ஆர்.டி.ஓ. சங்கீதா அதிரடியாக கைப்பற்றினார். அந்த பணத்திற்கு சொந்தம் கொண்டாடி இதுவரை யாரும் வரவில்லை. அதற்குள் தற்போது மீண்டும் உரிய ஆவணங்கள் இல்லாமல் நகை, பணம் பறி முதல் செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Add Comment