உள்ளாட்சி தேர்தலும் கடையநல்லூர் முஸ்லிம்களும்

உள்ளாட்சி தேர்தலும் கடையநல்லூர் முஸ்லிம்களும்

கடையநல்லூர் அரசியலில் முதிர்ச்சி அடைந்த மக்கள் நிறைந்த ஊர் என்றும் , குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தினர் அரசியல் முதிர்ச்சி அடைந்தவர்கள் என்றும் அரசியல் Viagra No Prescription கட்சியின் முதன்மை தலைவர்கள் நினைத்துக்கொண்டுள்ளனர் .

ஆனால் , உள்ளாட்சி தேர்தலில் முஸ்லிம் சமுதாயத்தினர் எப்படி நடந்து கொள்கின்றார்கள் என்று யாரும் நோக்கினால் , இந்த கம்ப்யூட்டர் காலத்திலும் இப்படி நடக்கின்றதா ? என்று கேட்கும் அளவுக்கு உள்ளது .
கடையநல்லூர் முஸ்லிம் சமுதாயத்தினர் , தங்களுடைய ஆன்மீக குருக்கள் ,அடிப்படையில் பல பிரிவுகளாக உள்ளனர் . ஆனால் , ஒரு சிலர்களை தவிர வேறு யாரும் அந்த பிரிவின் அடிப்படையில் பகைமை பாராட்டுவதில்லை .

ஆனால் ,உள்ளாட்சி தேர்தலில் மட்டும் , பகைமை தீயை அந்த ஒருசிலர் மூட்டி விட்டு குளிர்காய்கின்றனர் என்பது மிகவும் வேதனைக்குரிய விசயமாகும் .

ஒவ்வொரு வார்டு களிலும் அந்தவார்டை சார்ந்தவர்கள் யார்வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம் . ஆனால் , ஒரு குறிப்பிட்ட தரிக்காவை சார்ந்தவர்கள்தான் நிற்கவேண்டும் என்று எழுதப்படாத சட்டத்தை சிலர் கையில் எடுத்துக்கொண்டு நீதிக்கு புறம்பாக கூக்குரல் எழுப்பி வருகிறார்கள் . இதனால் , மக்களுக்கு சேவை செய்பவர்கள் தேர்தலில் நிற்க தடை ஏற்படுகின்றது , மக்கள் சேவை செய்யாமல் சுயநலமாக செயல் படுவர்களுக்கு வாய்ப்புகள் கிடைகின்றது . இதில் என்ன கொடுமை என்றால் , பதவி ஆசை கொண்ட இளைஞர் களும் அந்த பிரிவினை போக்குக்கு உடந்தை ஆகின்றனர் என்பதுதான் .

இந்த நிலை மாறவேண்டுமானால் , மக்களின் உண்மை பிரதிநிதிகள் வரவேண்டுமானால் , ஒட்டு மொத்த நடுநிலை யாளர்களும் , இளைய சமுதாயத்தினரும் , அந்த பிரிவினைவாதிகளுக்கு எதிராக களம் கண்டு , அவர்களின் சூழ்ச்சியை முறியடித்து , புரட்சியை ஏற்படுத்த வேண்டும் .

என்றும் உங்கள் நல்லூரான்

Add Comment