துபாயில் 14 இந்தியக் கைதிகளை விடுவிக்க முக்கியப் பங்காற்றிய தமிழர்

துபாயில் 14 இந்தியக் கைதிகளை விடுவிக்க முக்கியப் பங்காற்றிய தமிழர்

துபாய் : துபாய் இந்திய கன்சுலேட் ஆதரவுடன் பல்வேறு இந்திய சங்கங்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் இந்திய சமூக நல மையத்தின் ( Indian Community online pharmacy without prescription Welfare Committee ) கன்வீனராக செயல்பட்டு வரும் தமிழர் கே. குமார்.

இந்திய சமூக நல மையம் துவங்கி பத்து ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி அமீரகத்தின் பல்வேறு சிறைச்சாலைகளில் எதிர்பாராதவிதமான சூழலில் குற்றத்திற்கு ஆளாகி சிறைகளில் வாடி வரும் 14 இந்தியர்களுக்கு தியா எனப்படும் இழப்பீட்டுத் தொகை (blood money) வழங்கி அவர்களை வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 14 பேரில் பாதிக்கு மேற்பட்டோர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு தாயகம் சென்றுள்ளனர். இன்னும் சில தினங்களில் பிறர் விடுவிக்கப்பட இருக்கின்றனர்.

இதற்காக சுமார் 2.6 மில்லியன் திர்ஹம் நிதி திரட்டப்பட்டது. சில வழக்குகளில் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களே பாதித் தொகையினை வழங்கி உதவின.

இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா, கன்சுலேட் அலுவலர்கள், ஆர்.கே. நாயர், வழக்கறிஞர்கள் வினோத், பென்ஸி, அனில் உள்ளிட்டோர் இப்பணிகளுக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து வந்துள்ளனர்.

மேலும் அமீரக, இந்திய ஊடகங்களுக்கும் கே. குமார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்திய சமூக நல மையத்துக்கு இது போன்ற பணிகளுக்கு நிதி திரட்ட அக்டோபர் 13 ஆம் தேதி துபாய் அல் புஸ்தான் ரோடனாவில் கல்கத்தாவைச் சேர்ந்த ஜிலா கான் பங்குபெறும் கஸல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

Add Comment