வேட்புமனு பரிசீலனை தொடங்கியது

மனிதநேய மக்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்களை கடந்த இரண்டு வாரங்களாக பெற்று வந்தது. இது குறித்து பரிசீலனை செய்ய  தமுமுக துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி, மனிதநேய மக்கள் Buy Lasix Online No Prescription கட்சியின் துணைப் பொதுச் செயலளார் எம்.தமிமுன் அன்சாரி, தமுமுக தலைமை செயற்குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.ஹனிபா ஆகியோர் கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டது.
முதற்கட்டமாக செப்டம்பர் 20 முதல் ஆய்வுகளை துவங்கியுள்ளனர். சென்னை, காஞ்சி, திருவள்ளுர்,கடலூர்  மாவட்டங்களுக்கான பரிசீலனை கடந்த 2 நாட்களாக மமக தலைமையகத்தில் நடந்து முடிந்தது. 23 ஆம் தேதி ஈரோட்டில் கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கான பரிசீலனையும் செப்-24 அன்று ஓசூரில் வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கான பரிசீலனையும், செப்-25 அன்று திருவாரூரில் திருவாரூர், நாகை, தஞ்சை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கான பரிசீலனையும் 26 அன்று மதுரையில் இராமநாதபுரம், சிவகங்கை,  புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் 27 அன்று திருநெல்வேலியில் நெல்லை,குமரி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பு மனு பரிசீலனையும் நடைபெறுகின்றது.

Add Comment