இடைத்தேர்தலைக் கண்காணிக்க சிறப்புப் பார்வையாளர்கள்

எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பதற்கு முன்பே கார் விபத்தில் மரணம் அடைந்த சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி மேற்கு தொகுதியில் அக்டோபர் மாதம் 13-ம் தியதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலை கணகாணிப்பதற்கென்று மூன்று தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவிண்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

அடுத்த மாதம் 13-ம் தியதி நடைபெற இருக்கிற திருச்சி மேற்குத் தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலை கண்காணிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் 3 பார்வையாளர்களை நியமித்துள்ளது.  தேர்தலை முழுமையாக கண்காணிக்க IAS அதிகாரி R.K. Bactrim online பதக்கும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கண்காணிக்க IPS அதிகாரி ரஞ்சித்சிங்கும் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிக்க IRS அதிகாரி நிவேதிதா பிஸ்வாஸீம்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த இடைத் தேர்தலுக்கு உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் தேர்தல் பாதுகாப்புக்காக 5 கம்பெனி துணை ராணுவப் படையும் வர இருப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment