கடையநல்லூர் பகுதியில்உணவு பொருட்கள் ஏற்றுமதி மண்டலமும் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

கடையநல்லூர் சுற்று வட்டார பகுதியில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இங்கு நெல், சோளம் மட்டுமின்றி தக்காளி, கத்தரி, வெண்டை போன்ற காய்கறிகளும், வாழைப்பழம், திராட்சை போன்ற பழ வகைகளும் பயிரிடப்படுகிறது.
தக்காளி பயிரிடுவோர் எண்ணிக்கை இப்பகுதியில் அதிகரித்து வருவதால் ஆண்டுதோறும் தக்காளி உற்பத்தியும் உயர்ந்து வருகிறது. இங்கு விளையும் தக்காளி மதுரை, ராமநாதபுரம், உள்பட தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், கேரள மாநிலத்திற்கும் அதிக அளவு கொண்டு செல்லப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக தக்காளிக்கு சீராக, கட்டுபடியான விலை கிடைக்காததாலும்,  விவசாயிகள் மிகவும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது. 20 கிலோ கொண்ட ஒரு கூடை தற்போது 80 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் பல நேரங்களில் பறி கூலிக்கு கூட விலை Doxycycline online கிடைப்பதில்லை என விவசாயிகள் குமுறுகின்றனர்.
தென் மாவட்டங்களில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், உணவு பொருட்கள் ஏற்றுமதி மண்டலம் உருவாக்க கடந்த பாஜக ஆட்சியில்  திட்டமிடப்பட்டது. இதற்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அப்போதைய மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை இணை அமைச்சர் சண்முகம் அறிவித்தார். இதன் மூலம் குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு, பரிசோதனை சாலை, உலர்த்த தளம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட விவசாயிகளுக்கு தேவையான பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க திட்டமிடப்பட்டது.
ஆனால் இத்திட்டம் செயல் வடிவம் பெறாமல் கிடப்பில் போடப்பட்டதால் இப்பகுதி விவசாய தொழில் தொடர்ந்து நஷ்டமடையும் நிலையில் உள்ளது. எனவே கடையநல்லூர் உள்பட நெல்லை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளும், உணவு பொருட்கள் ஏற்றுமதி மண்டலமும் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.

Add Comment