சென்னை நகரத்தில் வளர்ச்சி பணிகள் தொடர திமுகவுக்கு வாக்களியுங்கள்

சென்னை : சென்னை நகர வளர்ச்சிப் பணிகள் தொடர, உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு வாக்களியுங்கள் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் மா. சுப்பிரமணியன் மற்றும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசார பயண தொடக்க நிகழ்ச்சி எண்ணூர் நெட்டுக்குப்பத்தில் நேற்று நடந்தது.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சுப்பிரமணியன், 1வது வார்டு வேட்பாளர் சரிதா சிவக்குமார், 2வது வார்டு வேட்பாளர் சரவணன் ஆகியோரை விழா மேடையில் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் ஸ்டாலின் பேசியதாவது:  எழுச்சியோடு இங்கு கூடியிருப்பவர்களை பார்க்கும்போது மீண்டும் உதயசூரியன் உதயமாகப் போகிறது என்பதை காட்டுகிறது.

ஏற்கனவே 5 ஆண்டு காலம் மேயராக பொறுப்பு வகித்த சுப்பிரமணியன் மக்களுக்கு சிறப்பான சேவை செய்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது 2வது முறையாக மேயர் வேட்பாளராக அவரே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் திமுக தலைவர் கருணாநிதியின் மனதில் எந்தளவுக்கு அவர் இடம்பிடித்துள்ளார் என்பதை அறியலாம்.

எனக்கும் சுப்பிரமணியனுக்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. நானும் இரண்டு முறை மேயராக பணியாற்றி உள்ளேன். அவரும் இரண்டாவது முறையாக பணியாற்ற உள்ளார். சென்னையில் பாலம், பூங்கா, பள்ளி கட்டிடம், மருத்துவமனை, சாலைகள் என அனைத்தும் மேம்பாடு அடையும் வகையில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு, சென்னை மாநகரம் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வளர்ச்சி மீண்டும் தொடர திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார். டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, முன்னாள் அமைச்சர் பரிதி Buy Ampicillin இளம்வழுதி, முன்னாள் எம்பி கிருஷ்ணசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் சேகர்பாபு, டி.சி.விஜயன், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம், விஸ்வநாதன், கத்திவாக்கம் நகராட்சி தலைவர் திருசங்கு உட்பட பலர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து தாழங்குப்பம், நெட்டுக்குப்பம் பகுதியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியினர் வாக்கு சேகரித்தனர். முன்னதாக, திருவொற்றியூர் நகர செயலாளர் தனியரசு வரவேற்றார்.

மா.சுப்பிரமணியன்
இன்று மனு தாக்கல்

சென்னை மேயர் பதவிக்கு போட்டியிடும் மா.சுப்பிரமணியன் இன்று மனு தாக்கல் செய்கிறார். சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடக்கவுள்ளது. மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் தற்போதைய மேயர் மா.சுப்பிரமணியன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர், இன்று காலை 10 மணிக்கு ரிப்பன் மாளிகையிலுள்ள மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான தா.கார்த்திகேயனிடம் வேட்புமனு தாக்கல் செய்கிறார். முன்னதாக அவர் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து ஆசி பெறுகிறார்.

Add Comment