துபாயில் வேலூர் எம்.பி.யுட‌ன் தொலைநிலைக்க‌ல்வி மாண‌வ‌ர்க‌ள் ச‌ந்திப்பு

துபாய் : துபாயில் வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மானுட‌ன் அமீர‌க‌த்தில் ப‌ணிபுரிந்து கொண்டே தொலைநிலைக்க‌ல்வி மூல‌ம் ப‌யின்று வ‌ரும் த‌மிழ‌க‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் 17.06.2010 வியாழ‌க்கிழ‌மை த‌மிழ் உண‌வ‌க‌த்தில் ச‌ந்தித்த‌ன‌ர்.

முதுகுள‌த்தூர் ஜ‌ஹாங்கீர் த‌லைமையில் ஜாப‌ர், ச‌லீம், ஹ‌பீப் திவான், க‌னி, ஹுசைன் உள்ளிட்ட ப‌ல‌ர் வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மானை ச‌ந்தித்த‌ன‌ர். அப்போது அவ‌ர்க‌ள் தாங்க‌ள் துபாயில் கேம்ப‌ஸ் க‌ல்வி நிறுவ‌ன‌ம் மூல‌ம் சென்னைப் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ எம்.பி.ஏ. வ‌குப்பில் சேர்ந்துள்ள‌தாக‌வும், எனினும் முறையாக‌ தேர்வுகள் ந‌ட‌த்த‌ப்ப‌ட‌வில்லை என‌வும் புகார் அளித்த‌ன‌ர். மேலும் அந்நிறுவ‌ன‌ம் மாண‌வ‌ர்க‌ளிட‌ம் க‌ல்விக் க‌ட்ட‌ண‌த்தை வ‌சூல் செய்து விட்டு அத‌னை ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்திலும் செலுத்த‌வில்லை என‌வும் தெரிய‌ வ‌ருகிற‌து. இத‌ன் மூல‌ம் அந்நிறுவ‌ன‌ம் மூல‌ம் சேர்ந்த‌ மாண‌வ‌ர்க‌ள் தேர்வு எழுத‌ இய‌லாத‌ சூழ்நிலை ஏற்ப‌ட்டுள்ள‌தாக‌ அவ‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.

இப்புகாரினைக் கேட்ட‌ வேலூர் எம்.பி. அப்துல் ர‌ஹ்மான் துபாயில் இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌லுக்கு க‌டித‌ம் எழுதி மாண‌வ‌ர்க‌ளுக்கு மிக‌வும் சிர‌ம‌த்தை ஏற்ப‌டுத்தியுள்ள‌ அக்க‌ல்வி நிறுவ‌ன‌ம் மீது விசாரித்து உரிய‌ நட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ கேட்டுக் கொண்டுள்ளார். இத‌னைத் தொட‌ர்ந்து அம்மாண‌வ‌ர்க‌ள் இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் அலுவ‌ல‌க‌த்திற்கு துபாய் ஈமான் அமைப்பின் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா உத‌வியுட‌ன் சென்று த‌ங்க‌ளுக்கு ஏற்ப‌ட்டுள்ள‌ இன்ன‌ல்க‌ளைத் தெரிவித்த‌ன‌ர். அத‌ன் மீது ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ப்ப‌டும் என‌ அதிகாரிக‌ள் உறுதிய‌ளித்த‌ன‌ர்.

Buy Doxycycline Online No Prescription

Add Comment