தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத புரியாத புதிராக உள்ளது.

சென்னை : தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, இந்த உள்ளாட்சி தேர்தலில் 8 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீண்ட காலமாக பெரும்பாலான கட்சிகள் கூட்டணி அமைத்தே தேர்தலை சந்தித்து வந்தன. தேர்தலுக்கு தேர்தல் கூட்டணிகளும் மாறி வந்தன. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், அதிமுக தலைமையில் தேமுதிக, கம்யூனிஸ்ட்கள்,

புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவக மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் போன்ற கட்சிகள் ஒரு அணியாகவும் போட்டியிட்டன. பா.ஜ. மட்டும் தனித்தும் தேர்தலை சந்தித்தது. அதிமுக அணியில் அதிகபட்சமாக தேமுதிகவுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன.  சட்டப்பேரவை தேர்தல் முடிந்து 4 மாதங்களில் உள்ளாட்சிக்கு தேர்தல் நடத்தப்படுவதால், கூட்டணிகள் அப்படியே தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கட்சித் தொண்டர்களும் அந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ஆனால், எல்லாருடைய எதிர்பார்ப்புக்கும் மாறாக, இந்த உள்ளாட்சி தேர்தலில் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வந்ததுமே திமுக தனித்து போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்தார். பின்னர் காங்கிரஸ், பாமக, முஸ்லிம் லீக் கட்சிகளும் தனித்து போட்டி என ஒன்றன் பின் ஒன்றாக அறிவித்தன. இதைத் தொடர்ந்து, அதிமுக அணியிலும் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டணி கட்சிகளுடன் பேச குழு அமைத்த ஜெயலலிதா, திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

தேமுதிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசிக்க தொடங்கின. அடுத்தடுத்து அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளி வந்த நிலையில், தனித்து போட்டி என தேமுதிகவும் அறிவித்தது. வேட்பாளர் பட்டியலை விஜயகாந்தும் வெளியிட்டார். மேலும், மார்க்சிஸ்ட், புதிய தமிழகம் கட்சிகளும் நேற்று முன்தினம் தனித்து போட்டி என்ற அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் அதிமுகவுடன் தொடர்ந்து பேசி வருகிறது. கேட்ட இடங்கள் கிடைக்காத பட்சத்தில் அவர்களும் தனியாக களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, பாஜகவும் தனியாக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க உள்ளது. தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த உள்ளாட்சி தேர்தலில் எல்லா கட்சிகளும் தனியாக களத்தில் குதித்துள்ளன. இதனால் திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட், பாஜ கட்சிகளிடையே 8 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இதுதவிர விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சிகளும் தங்களுக்கு வாய்ப்புள்ள இடங்களில் Levitra No Prescription வேட்பாளர்களை நிறுத்துகின்றன. இதுதவிர ஏராளமான சுயேச்சைகளும் தேர்தல் களத்தில் உள்ளனர். திமுக, அதிமுக, தேமுதிக கட்சிகள் மட்டுமே பெரும்பாலான இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. மதிமுக, பாமக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சில இடங்களுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளது.

ஆனால், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகின்றன. இதனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எல்லா கட்சிகளும் தனித்து போட்டியிடுவதால் இந்த உள்ளாட்சி தேர்தல், தமிழக மக்களிடையே பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மனு தாக்கல் சூடு பிடிக்கிறது

வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கியது. 3 நாட்கள் வேட்புமனு தாக்கல் முடிந்துள்ளது. இந்த 3 நாட்களில் தமிழகம் முழுவதும் மொத்தம் 25,723 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் நகர்புறத்தில் 338 பேரும், கிராமப்புறத்தில் 25,385 பேரும் அடங்குவர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுயேச்சைகள். இந்நிலையில், இன்றும் வேட்புமனு தாக்கல் நடக்க உள்ளது. நாளை மகாளய அமாவாசை ஆகும். இந்த அமாவாசை இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதனால், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மனு தாக்கலுக்கு 4 நாட்களே மீதி

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 29ம் தேதியுடன் முடிகிறது. அதனால், இன்னும் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். இந்த குறுகிய காலத்தில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், பாஜக போன்ற கட்சிகள் எப்படி வேட்பாளர்களை தேர்வு செய்து, தங்கள் வேட்பாளர்களை களத்தில் இறக்க போகிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.

Add Comment