சவுதி மன்னர் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவுள்ளார்

சவுதி மன்னர்கூட பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். பெண்களை ஒடுக்குமுறைக்குள்ளேயே இதுவரை காலமும் வைத்திருந்த சவுதி மன்னர் எதிர்காலத்தில் நடக்கவுள்ள சவுதி நகரசபை தேர்தலில் பெண்கள் போட்டியிடலாம் என்று தெரிவித்தார். மன்னரின் இந்த அறிவிப்பு உலக நாடுகளில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. சவுதியில் கடந்த வியாழன் நடைபெற்ற நகரசபைத் தேர்தலில் 285 நகர சபைகளுக்கு 5000 ஆண்கள் போட்டி போட்டனர். இவர்கள் அரைப்பங்கு பதவிகளை பூர்த்தி செய்வார்கள், Cialis No Prescription ஏனைய அரைப்பங்கு உறுப்பினர்கள் சவுதி மன்னரால் நியமனம் செய்யப்படுவார்கள். இந்தத் தேர்தலில் பெண்கள் பின்தள்ளப்பட்ட காரணத்தால் 60 கல்வியியலாளர் தேர்தலில் இருந்து விலத்தி நின்றனர். இந்த நிலையில் சவுதி மன்னரின் பெண்கள் பற்றிய புதிய அறிவிப்பு வந்துள்ளது. மத்தியகிழக்கு, வட ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள ஜனநாயகப் புரட்சி சவுதிக்குள் நுழைந்துவிடாமல் தடுக்க அரச குடும்பம் பல முயற்சிகளை எடுத்துள்ளது. பெண்ணுரிமை பற்றி சவுதி மன்னரின் கண்களை அயல் நாடுகளின் புரட்சியே திறந்து வைத்துள்ளது. அதேவேளை சவுதியில் மிக இறுக்கமான இஸ்லாமிய சாரியார் சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. பெண்கள் தேர்தலில் போட்டியிடுவதில் இச்சட்டங்கள் பாரிய பிரச்சனையாக இருக்காது என்றும் மன்னர் கூறுகிறார்.

Add Comment