பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் உறுப்புரிமை மூன்றில் இரண்டு பங்கு உலகம் ஆதரவு

பாலஸ்தீன அதிபர் முகமட் அபாஸ் நேற்று ஐ.நாவில் வைத்த பிரேரணையை ஐ.நாவின் உறுப்புரிமையுள்ள நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் ஆதரிக்கின்றன. இம:முறை பாலஸ்தீனர்கள் பயங்கரவாத வழியில் செல்லவில்லை, சட்ட மூரணான வழியிலும் செல்லவில்லை. சர்வதேசம் விரும்பும் ஜனநாயக வழியில் காயை நகர்த்தியுள்ளார்கள். இந்தப் பிரேரணையில் அபாஸ் தோல்வியடைந்தாலும், அவருடைய முயற்சி வெற்றிகரமானதே. பாலஸ்தீன பிரச்சனையை தடாலடியாக உலக நாடுகள் மறுக்க முடியாத Buy Levitra Online No Prescription ஒரு புள்ளிக்குள் நகர்த்தியுள்ளார். இதுவரை காலமும் பயங்கரவாத ஊதுகுழலை ஊதிய அமெரிக்கா இப்போது இஸ்ரேலிய சியோனிச பயங்கரவாதத்தின் பக்கமாக திசை திரும்ப வேண்டிய அவலம் உருவாகியுள்ளது. பராக் ஒபாமா சமர்ப்பிக்கும் வீட்டோவின் விளைவு எப்படி அமையப்போகிறதென அவருக்கு இதுவரை சரியாகப் புரியவில்லை. வெளிநாடுகளில் மட்டுமல்ல அவர் உள்நாட்டிலேயே பாரிய சிக்கல்களைச் சந்திக்க நேரலாம், அவருடைய அடுத்த பருவப் பதவியையே அது பறிக்கக்கூடிய அபாயமும் உள்ளது. மேலை நாடுகளின் ஊடகங்கள் இப்பொழுதே அமெரிக்காவை வன்மையாகக் கண்டிக்க ஆரம்பித்துவிட்டன. வியட்நாம் போருக்கு எதராக அமெரிக்கர்கள் கிளர்ந்தது போல பாலஸ்தீன பிரச்சனையில் அமெரிக்கா விடப்போகும் தவறுக்கு எதிராக அமெரிக்க மக்கள் திரண்டெழ வாய்ப்புள்ளது.

அதேவேளை இந்த விவகாரத்தை மிக முக்கியம் கொடுத்து பேச வேண்டியது இலங்கையில் உள்ள தமிழர் கூட்டமைப்பாகும். அந்தக் கட்சியில் உள்ளவர்கள் இதுபற்றி இதுவரை யாதொரு கருத்தையும் உதிர்க்கவில்லை. இப்படியொரு விவகாரம் சர்வதேச அரங்கில் நடைபெறுகிறது, இது பற்றி நாமும் பரந்த அறிவுடன் சிந்திக்க வேண்டும் என்ற கோணத்தில் மக்களுக்குயாதொரு வழிகாட்டலையும் செய்யவில்லை. கூட்டமைப்பினர் நீண்ட காலமாக வெறும் கிணற்றுத் தவளை அரசியலையே நடாத்தி வருகிறார்கள் என்ற கவலை வெளிநாடுகளில் பலருக்கு இருக்கிறது. இதுபோன்ற பிரேரணையை இலங்கை தமிழ் மக்கள் ஐ.நாவில் எப்படி சமர்ப்பிப்பது..? பாலஸ்தீன முன்மாதிரியை பின்பற்றி செயற்பட கூட்டணிக்குள் ஆற்றல் உள்ள தலைவர்கள் இருப்பதாகக் கூறமுடியவில்லை. ஆகவே இலங்கையின் கல்விமான்கள் இதுபற்றி ஆழமாக சிந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுப்பது அவசியம் என்ற கருத்தும் நிலவுகிறது.

Add Comment