கடையநல்லூர் நகராட்சி தேர்தலில் திமுக – முஸ்லிம் லீக் கூட்டணியா ?

கடையநல்லூர் நகராட்சி தேர்தலில் திமுக – முஸ்லிம் லீக் கூட்டணியா ?

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது .கடையநல்லூரிலும் அதேபோன்று ,உள்ளாட்சி தேர்தல் பணிகள் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது .
அனைத்து கட்சிகளுமே கிட்டத் தட்ட தனியாகத்தான் தேர்தலை சந்திக்க முடிவு செய்தபோதிலும் , ஆங்காங்கே சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி வைத்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடுள்ளன .
இந்த நிலை கடையனல்லூரையும் விட்டு விட வில்லை . இங்கு , ஆளும் Viagra online அதிமுக , எதிர்கட்சி திமுக இரண்டு கட்சிகளும் மற்ற கட்சிகளை கூட்டணிக்கு தேடின. கடையநல்லூரை பொருத்து திமுக , அதிமுக , ஆகிய கட்சிகளுக்கு சமமான பலம் பொருந்திய கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்ளது . எனவே , அதிமுக வும் திமுகவும் முஸ்லிம் லீக்குடன் கூட்டணி வைக்க விரும்பி , மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன என்று அக்கட்சிகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
ஆனால் , தற்போது திமுக வுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கும் உடன்பாடு ஏற்பட்டு விட்டது என்றும்; திமுக நகராட்சி தலைவர் பதவிக்கு நிற்பதால் , துணைத்தலைவர் பதவி இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு என்றும் ; 12 வார்டுகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கும் , 21 வார்டுகள் திமுக விற்கு என்றும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு விட்டதாக அக்கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கூறினர் .

தகவல் : நல்லூரான்

Add Comment