கடையநல்லூருக்கு வந்த இலவச “டிவி’கள் அம்பைக்கு சென்றன : பொதுமக்கள் அதிருப்தி

கடையநல்லூர் நகராட்சி பகுதிக்கு வினியோகம் செய்ய வந்த இலவச கலர் “டிவி’கள் அம்பை நகராட்சிக்கு கொண்டு செல்லப்பட்டன. இது பொதுமக்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் இலவச கலர் “டிவி’ பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் கடையநல்லூர் தொகுதியில் உள்ள கிராம பஞ்.,கள், டவுன் பஞ்., பகுதிகளுக்கு வழங்கப்பட்டு விட்டன. இதனிடையில் கடையநல்லூர் தொகுதியின் தலைமையிடமான நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இலவச கலர் “டிவி’ வழங்கிடுவதற்காக மாவட்ட நிர்வாகம் மூலம் சுமார் 8 ஆயிரம் “டிவி’கள் அனுப்பபட்டு அவை அனைத்தும் நகராட்சி கவுன்சில் அரங்கம் மற்றும் சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்நிலையில் கடையநல்லூர் நகராட்சிக்கு சுமார் 10 ஆயிரம் இலவச கலர் “டிவி’கள் தான் வினியோகம் செய்யப்படுவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஆனால் வீட்டுக்கு ஒரு கலர் “டிவி’ வழங்கிட வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வந்தது. முக்கிய அரசியல் கட்சிகள் இந்த கோரிக்கையினை மாவட்ட நிர்வாகத்திற்கும், தொகுதி எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.

பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும் போது பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் எம்எல்ஏ.,விடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நகராட்சியில் உள்ள வார்டு கவுன்சிலர்களிடம் buy Ampicillin online அந்தந்த பகுதியில் தேவைப்படுகின்ற இலவச கலர் “டிவி’களின் பட்டியலை தயாரித்து தரும்படி எம்எல்ஏ கேட்டுக் கொண்டார்.

மேலும் நகராட்சி பகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இலவச கலர் “டிவி’களின் எண்ணிக்கை பற்றாக்குறையாக இருப்பதாகவும், இதனால் அதிகமான அளவில் “டிவி’கள் அனுமதிக்க வேண்டுமெனவும் மாவட்ட கலெக்டரிடம் எம்எல்ஏ நேரிடையாக கேட்டுக் கொண்டார். இதனால் நகராட்சி பகுதியில் இலவச கலர் “டிவி’ பெறுவதற்கான பட்டியல் மீண்டும் சர்வே எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் நகராட்சி பகுதிக்கு வரப்பட்ட இலவச கலர் “டிவி’கள் அனைத்தும் கடந்த சில தினங்களுக்கு முன் அம்பை நகராட்சிக்கு கொண்டு செல்லப்பட்டதாக பரவலாக கூறப்படுகிறது. நகராட்சி பகுதிக்கு வந்த “டிவி’கள் மற்றொரு நகராட்சிக்கு இடம் பெயர்ந்துள்ளதை அடுத்து தமிழக அரசின் இலவச கலர் “டிவி’யை பெறுவதற்கு ஆர்வமாக இருந்த கடையநல்லூர் நகராட்சி மக்கள் பெரும் ஆதங்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் நகராட்சி பகுதி மக்களுக்கு தேவையான “டிவி’கள் அனைத்தும் பெறுவதற்கான ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த மாதம் “டிவி’கள் வினியோகம் செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் எம்எல்ஏ அலுவலக மேலாளர் புலவர் செல்வராஜ் தெரிவித்தார்.

Add Comment