சிபிஎம் போல துணியாமல் அதிமுக கூட்டணிக்காக கடுமையாக அலையும் சிபிஐ

சென்னை: அதிமுகவில் கேட்ட இடம் கிடைக்காததால், டக்கென தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்து பேச ஆரம்பித்து விட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் போல இல்லாமல், அதிமுகவிடம் தொடர்நது சீட் கேட்டு அலைந்து கொண்டிருக்கிறது சிபிஐ.

அதிமுகவை விட்டு பிரிந்து வர தா.பாண்டியனுக்கு சற்றும் மனம் இல்லை போலும். எவ்வளவுதான் அதிமுக தரப்பில் இழுத்தடித்தாலும் சற்றும் மனம் தளராமல் தொடர்ந்து அதிமுகவிடம் சீட் கேட்டு அலைந்து கொண்டிருக்கிறது அக்கட்சி.

முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி Doxycycline No Prescription தலைமையிலான குழு கிட்டத்தட்ட தினசரி போய் அதிமுகவுடன் பேச்சு நடத்தி வருகிறது. அதிமுக தரப்பில் சிபிஐ கேட்கும் இடங்களைத் தரத் தயாராக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும் சிபிஐ விடுவதாக இல்லை. மனம் தளரதா விக்கிரமாதித்தன் போல இடைவிடாமல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இன்றும் கூட பழனிச்சாமி குழுவினர் அதிமுக தரப்புடன் பேசிப் பார்த்து வந்துள்ளனர். ஆனாலும் உடன்பாடு ஏற்பட்டதாக தெரியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து பேசப் போவதாக சிபிஐ தரப்பி்ல கூறுகிறார்கள்.

ஒருவேளை தேமுதிகவுடன் சிபிஎம் பேச்சுக்களை முடித்த பின்னர் போய் சேர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் சிபிஐ இருக்கிறதா என்பது தெரியவில்லை.

இப்போதைய நிலவரப்படி இன்னும் அதிமுகவை மலை போல நம்பியுள்ளது சிபிஐ என்று கூறப்படுகிறது.

Add Comment