ஸ்பெக்ட்ரம் வழக்கில் அரசியல் தலையிடக்கூடாது என்பது என் கருத்து : கலைஞர்

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

டெல்லி சிறப்பு நீதி மன்றத்தில் இன்றையதினம் ராஜா மீதும், கனிமொழி மீதும் ஒரு புதிய குற்றச்சாட்டினை 409-வது பிரிவின்படி சாற்றியிருக்கிறார்களே?

Amoxil No Prescription align=”justify”>இன்றைய தினம் அதே நீதி மன்றத்தில் கனிமொழி மீதான விசாரணை முடிந்து விட்டது என்றும், ஜாமீனில் விடுவதற்கு ஆட்சேபணை இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்களே, அதைப்பற்றி கேட்கவில்லையே?

சி.பி.ஐ. இவ்வாறு மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்க ஏதாவது காரணம் இருக்கிறதா?

இது நீதிமன்ற விவகாரம். எனவே அதற்கான விளக்கங்கள் எதையும் நான் சொல்ல விரும்பவில்லை.

இன்றைய சி.பி.ஐ.யின் நடவடிக்கைக்குப் பிறகு கனிமொழிக்கு விரைவில் ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?கிடைக்க வேண்டுமென்று தான் முயற்சிக்கிறோம்.

ப.சிதம்பரம் பற்றி எதிர்க்கட்சிகள் எல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சொல்வதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

  அது அவர்களுடைய கருத்து. இந்த வழக்கில் அரசியல் தலையிடக்கூடாது என்பது என் கருத்து. இந்த வழக்கில் முதலில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்றார்கள், பிறகு 30 ஆயிரம் கோடி இழப்பு என்றார்கள்.

அதன் பிறகு நஷ்டமே இல்லை என்று அதிகாரப்பூர்வமாகச் சொன்னார்கள். இதற்கிடையில் நான் எதையும் சொல்வது முறையாக இருக்காது.

ஏதோ ஒரு வகையில் இந்த வழக்கில் ப. சிதம்பரத்திற்கு சம்மந்தம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

சிதம்பரம் மீது முழு நம்பிக்கை உள்ளதாக வெளிநாட்டிலிருந்த பிரதமரே சொல்லியிருக்கிறார்.

ராஜா மீது இதே குற்றத்தை முதலில் சொல்லி, அவர் பதவி விலக வேண்டுமென்றார்கள். அதற்குப் பிறகு தயாநிதி மாறன் மீதும் இதே புகாரைச் சொன்னார்கள். தற்போது சிதம்பரம் மீதும் அதே புகாரைத் தானே சொல்கிறார்கள்?

ஒருவரை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்பதற்காகவே புகாரை அள்ளி வீசுவதை நான் ஏற்பதற்கில்லை. தமிழ் நாட்டிலிருந்து சென்ற ஒரு அமைச்சரை பதவியிலிருந்து கீழே இறங்கச் சொல்ல நாம் யார்? விசாரணையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்பது என் கருத்து.

முக்கியமான அமைப்பான டிராய் இந்த அலைக்கற்றை பிரச்சினையில் எந்தவிதமான இழப்பும் இல்லை என்று சொல்லி விட்ட பிறகு, புதிய குற்றச்சாட்டினை சி.பி.ஐ. சொல்கிறதே?

அலைக்கற்றை விவகாரத்தில் பல அமைப்புகள், பல கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்கள். அவைகளை யெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து நீதி வழங்க நீதிபதிகள் இருக்கிறார்கள்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சிதம்பரத்தை பாதுகாக்கின்ற அளவிற்கு, ராஜாவையோ, தயாநிதி மாறனையோ பாதுகாக்கவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா?

அரசியலில் வருத்தப்படவோ, மகிழ்ச்சி அடையவோ இது போன்ற நிகழ்வுகளை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு சோனியா காந்தியை டி.ஆர். பாலு சந்தித்தது பற்றி?

அந்த அம்மையார் அமெரிக்கா சென்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு ஓய்வுக்குப் பின்னர் திரும்பி வந்திருக்கிறார்கள். அவர்களைப் போய் மனிதாபிமானத்தோடு உடல்நலம் விசாரிப்பது பற்றி யூகங்களுக்கு இடமில்லை!

நீங்கள் டெல்லி சென்று சோனியாவைச் சந்திப்பீர்களா?

நான் இந்த வழக்குக்காகவே நீதி மன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும். இப்போது சென்றால் பத்திரிகைக்காரர்களாகிய நீங்கள் எல்லாம் சும்மாயிருக்க மாட்டீர்கள்.

உங்களுடைய கற்பனைக் குதிரையை எப்படி வேண்டுமானாலும் ஓடவிட்டு விடுவீர்கள். அதனால் தான் இந்த வழக்கு முடிந்த பிறகு நான் டெல்லி சென்று சோனியா காந்தியை நிச்சயமாகச் சந்திப்பேன்.

ஏனென்றால் நான் மனித நேயம் உள்ளவன், மனிதாபிமானம் உள்ளவன். தோழமைக் கட்சியின் தலைவரை எந்த அளவிற்கு மதிக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவன்.

Add Comment