ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ராசா மீதான வழக்கில் மேலும் ஒரு பிரிவு சேர்ப்பு

புதுடெல்லி : ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது இ.பி.கோ 409வது பிரிவில்(நம்பிக்கை மோசடி) புதிய குற்றச்சாட்டை சேர்த்து நீதிமன்றத்தில் சி.பி.ஐ மனு தாக்கல் செய்துள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கை டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. வழக்கில் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் பலர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது தொடர்பான வாதங்கள் முடிவுற்று, நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கு நேற்று நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ சார்பில் வக்கீல் யு.யு.லலித் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டதாவது: முன்னாள் அமைச்சர் ராசா உள்ளிட்டோர் மீது இ.பி.கோ பிரிவுகள் Buy Amoxil 120பி(சதி), 420(மோசடி), 468, 471 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ராசா மற்றும் அவரது தனி செயலாளராக இருந்த சந்தாலியா, தொலைதொடர்பு துறை முன்னாள் செயலர் பெகுரா ஆகியோர் அரசு பணியில் இருந்துள்ளனர். அவர்கள் விதிகளுக்கு புறம்பாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததன் மூலம் கடமையில் இருந்து தவறியுள்ளனர். எனவே, அவர்கள் மீது இ.பி.கோ பிரிவு 409(நம்பிக்கை மோசடி) என்ற பிரிவிலும் குற்றம்சாட்டப்படுகிறது.

இதே போல், மற்றவர்கள் மீது தொடரப்பட்ட பிரிவுகளுடனும், பிரிவு 409ஐ சேர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இ.பி.கோ. பிரிவு 409ன் கீழ் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கலாம். சிதம்பரத்திடம் விசாரணை:இதற்கிடையே, ராசாவின் வக்கீல் சுசில்குமார் வாதாடுகையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை வழக்கில் சாட்சியாக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Add Comment