மக்கள் மறியலால் அதிகாரிகள் அதிரடி ரேஷன் கடை பூட்டை உடைத்து பொருட்கள் வினியோகம்

நித்திரவிளை : குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே முப்புறங்காவு பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இந்த மாதத்தில் இதுவரை மொத்தம் 4 நாட்கள் மட்டுமே இக்கடை திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 23ம் தேதி கடைக்கு அரிசி வந்துள்ளது. 24ம் தேதி காலையில் அரிசியை வினியோகம் செய்த ஊழியர், உதவியாளர் வரவில்லை எனக்கூறி மதியத்துக்கு பின்னர் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இதனால் அப்பகுதி மக்கள் ரேஷன் அரிசி வாங்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

நேற்று காலை 10 மணியாகியும் கடை திறக்கப்படவில்லை. தகவல் அறிந்த கொல்லங்கோடு வட்டார மார்க்சிஸ்ட் செயலாளர் விஜயமோகனன், கொல்லங்கோடு பேரூர் பாஜ தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் அங்கு வந்தனர். அவர்கள் தலைமையில் பெண்கள் உட்பட சுமார் 100 பேர் கடை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குளச்சல் ஏஎஸ்பி தர்மராஜன், கொல்லங்கோடு எஸ்ஐ குமரவேல் பாண்டியன், வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாற்று ஊழியர் மூலம் கடையை திறக்க ஏற்பாடு செய்து தருவதாக கூறினர்.  எனினும் நிரந்தர ஊழியர் நியமிக்க Buy cheap Amoxil வேண்டும், அரிசி வினியோகத்தை உடனே செய்யவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

பின் ரேஷன் கடையை முற்றுகையிடும் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  தகவல் அறிந்த விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி சுசிபிரேம்லா அங்கு வந்து ரேஷன் கடை பூட்டை உடைத்து மாற்று ஊழியர்கள் உதவியுடன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தார்.

Add Comment