குற்றாலத்தில் நேற்று தண்ணீர் வரத்து குறைவால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி…

குற்றாலத்தில் நேற்று தண்ணீர் வரத்து குறைவால் சுற்றுலா பயணிகள் அதிருப்தியடைந்தனர்.

தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி காட்டி வரும் நிலையில் குற்றாலம் பகுதியில் சீசனும் அதுபோல்தான் இருந்து வருகிறது. குற்றாலத்தில் நேற்று காலை முதலே வெயில் Doxycycline No Prescription கொளுத்தியது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்தது. மெயின் அருவியில் மிதமாக தண்ணீர் விழுந்தது. விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

வெளியூரில் இருந்து வந்துவிட்டோம் எப்படியும் அருவியில் ஐந்து நிமிடமாவது குளித்தே தீர வேண்டும் என்ற ஆவலுடன் வந்திருந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து சென்றனர். செண்பகாதேவி, தேனருவியில் சற்று அதிகமாக தண்ணீர் விழுந்தது.

ஐந்தருவியில் நேற்று முன்தினம் இரவு 5 கிளைகளிலும் சுமாராக விழுந்த தண்ணீர் நேற்று மேலும் குறைந்தது. இங்கும் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பழைய குற்றால அருவியில் தண்ணீர் பாறையை நனைத்தபடி விழுந்தது. புலியருவியிலும் இதே நிலைதான். சிற்றருவியில் குறைவாக விழுந்த தண்ணீரில் குளிக்க கூட்டம் அலைமோதியது.

செண்பகாதேவி அருவியில் அதிகாலையிலேயே மலையேறிய சுற்றுலா பயணிகள் மட்டுமே குளிக்க முடிந்தது. 10 மணிக்கு மேல் சிற்றருவிக்கு மேலே செல்வதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அதிருப்தியடைந்த சுற்றுலா பயணிகள் வெறுப்புடன் கீழே இறங்கி சென்றனர்.

Add Comment