கடையநல்லூர் பாப்பான் கால்வாயில் நாளை ஆக்ரமிப்பு அகற்றம்

கடையநல்லூரில் பாப்பான் கால்வாயில் காணப்படும் ஆக்ரமிப்புகள் நாளை (22ம் தேதி) அகற்றப்படுகின்றன. மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினர் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடையநல்லூர் கருப்பாநதி அணைக்குட்பட்ட பாப்பான் கால்வாய் மூலமாக சுமார் 5 ஆயிரத்து 500 ஏக்கர் பிசான சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கால்வாய் பகுதிகளில் காணப்படும் ஆக்ரமிப்புகள் காரணமாக பெரும்பாலான குளங்களுக்கு Buy cheap Amoxil தண்ணீர் சீராக வராததால் போதிய சாகுபடி பெற முடியவில்லை என விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்தது.

கால்வாயின் இருபுறங்களும் பலஅடி தூரத்திற்கு ஆக்ரமிப்புகள் காணப்படுவதாகவும், இதன் காரணமாக தண்ணீர் சீராக வரப்பெறவில்லை எனவும் விவசாயிகள் தரப்பில் புகார் கூறியதையடுத்து ஆக்ரமிப்பு அகற்றும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வந்தது. கால்வாயில் காணப்படும் ஆக்ரமிப்பு தொடர்பான சர்வே பணிகள் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டது.

இருந்தபோதிலும் ஆக்ரமிப்பு காரணமாக கால்வாய் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், அப்பகுதியில் குடியிருந்து வரும் மக்களுக்கு ஆக்ரமிப்பு காரணமாக இழப்பீடு ஏற்பட்டால் அதற்கான இலவச வீட்டுமனை வழங்கிட வேண்டுமெனவும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தனர்.

இதனிடையில் குடியிருப்பு பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆக்ரமிப்புகள் அகற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டுமென தொகுதி எம்.எல்.ஏ., பீட்டர் அல்போன்ஸ் மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டதுடன், இலவச வீட்டுமனை பட்டா கிடைத்திட ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் கடையநல்லூரில் ஆக்ரமிப்பு அகற்றுவது குறித்து சர்வ கட்சிகள், பொதுநல அமைப்புகள் ஆகியோருடன் சமரச பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.

கால்வாயின் இருபுறமும் 5 அடி தூரத்திற்கு ஆக்ரமிப்புகளை அகற்றுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கடையநல்லூர் கருப்பாநதி அணைக்குட்பட்ட பாப்பான் கால்வாயில் நாளை (22ம் தேதி) ஆக்ரமிப்புகள் அகற்றப்படுகின்றன. இதற்கான பணிகளில் மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது உறுதி என தெரிந்த நிலையில் கால்வாயில் ஆக்ரமிப்பில் இருந்த குடியிருப்புகளில் வசித்து வருவோர் சிலர் கடந்த சில நாட்களாக தாங்களாவே முன்வந்து ஆக்ரமிப்புகளை அகற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Add Comment