சென்னையில் பிரசாரம்: யாருக்கும் பயப்பட மாட்டேன் தவறை தட்டிக் கேட்பேன்;விஜயகாந்த் பேச்சு(இது நல்ல காமடி)

சென்னையில் பிரசாரம்:
யாருக்கும் பயப்பட மாட்டேன் தவறை தட்டிக் கேட்பேன்;விஜயகாந்த் பேச்சு
சென்னை, செப்.28-

                                                    இது நல்ல காமடி

சென்னை மாநகராட்சி தே.மு.தி.க. மேயர் வேட்பாளர்   வேல்முருகன் மற்றும் 200 கவுன்சிலர் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்  மயிலாப்பூரில் நடந்தது. வேட்பாளர்களை அறிமுகம் செய்து விஜயகாந்த் பேசியதாவது:-
உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறோம். இன்னொரு கம்யூனிஸ்டு கட்சியும் எங்களுடன் வர இருக்கிறது. நம்பினோர்   கைவிடப்படார். பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு நிருபர் தெய்வத்தோடும், மக்களோடும்தான் கூட்டணி என்கிறீர்கள்.
கம்யூனிஸ்டுகளோடு கூட்டணி வைத்துள்ளீர்களே என்றார். இப்போதும் சொல்கிறேன் மக்கள்தான் தெய்வம். அவர்கள் விருப்பப்படிதான் கூட்டணி வைத்தேன். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் கூட்டணி வைத்தேன். இப்போதுள்ள ஆட்சியை 6 மாதம் குறை  சொல்ல மாட்டேன்.  இப்போது எங்களால் என்ன செய்ய முடியும்?
தமிழகத்தின் முன்னேற்றம்  மற்றும் தி.மு.க.வை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தோம். போலீசார் சரியாக இருந்தால் நாட்டில் 50 சதவீத பிரச்சினைகள் சரியாகி விடும். நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக ஆளுங்கட்சிக்குதான் ஓட்டளிக்க வேண்டும்  என்பதல்ல. தே.மு.தி.க.வுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும்.நான் யாருக்கும் buy Doxycycline online பயப்பட மாட்டேன். தவறு நடந்தால் தட்டிக் கேட்பேன்.
தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல திட்டங்களை தே.மு.தி.க. வைத்துள்ளது. ஆட்சி அதிகாரம் இருந்தால்தான் இத்திட்டங்களை செயல்படுத்த முடியும்.
இவ்வாறு  விஜயகாந்த் கூறினார்.
கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த், பார்த்தசாரதி எம்.எல்.ஏ., எல்.கே.சதீஷ், மாவட்ட செயலாளர்கள் வி.என்.ராஜன்,  செந்தாமரைக் கண்ணன், வி.யுவராஜ், தொழிற்சங்க மாநில செயலாளர் சவுந்தர பாண்டியன், கே.எஸ்.மலர் மன்னன், தேனாம்பேட்டை ஜி.குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Add Comment