மனித நேய மக்கள் கட்சியும் அதிமுகவிடமிருந்து பிரிந்து தனித்துப் போட்டி

மனித நேய மக்கள் கட்சியும் அதிமுகவிடமிருந்து பிரிந்து தனித்துப் போட்டி

அதிமுக கூட்டணியிலிருந்து மனித நேய மக்கள் கட்சியும் பிரிந்து வந்து விட்டது. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அக்கட்சித் தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லாஹ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து போட்டியிட்டது. வலுவான கூட்டணி உருவாவதிலும், ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதிலும் மனிதநேய மக்கள் கட்சி தீவிரமாக முனைப்பு காட்டியது.

அதன் ளைவாக, கூட்டணிக் கட்சியினரின் ஆதரவோடு அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதே கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் நீடிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி விரும்பியது. ம.ம.க. சார்பில் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீது ஆகியோர் அதிமுக குழுவினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

போதிய கால அவகாசம் இல்லாத நிலையிலும், கூட்டணி தொடர வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடும், சிறுபான்மை சமூக மக்கள் அதிக அளவில் உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பெற வேண்டும் என்ற உயர்ந்த பார்வையிலும் ம.ம.க. அதிமுக குழுவினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால், கூட்டணி ஜனநாயகம், அரசியல் நியாயம் என எதைப் பற்றியும் கவலைப்படாமல், உறுதியான முடிவுகளையும் கூறாமல், வேண்டுமென்றே தாமதிக்கும் தந்திரத்தை அதிமுக கடைப்பிடித்தது.

எனவே காலதாமதத்தை கருத்தில் கொண்டும், தொண்டர்களின் உணர்வுகளை கவனத்தில் கொண்டும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்து களம் காண்பது என்று உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மனித நேய மக்கள் கட்சி அடுத்து தேமுதிக கூட்டணியல் போய் இணையலாம் என்று தெரிகிறது.அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக, சிபிஎம், சிபிஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு அடுத்துப் பிரிந்து Buy Cialis Online No Prescription வந்துள்ள கட்சி மனித நேய மக்கள் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment