14 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படாத மதரஸா ஆசிரியர்கள். பசிப் பட்டினியால் தவிப்பு

:கடந்த 14 மாதங்களாக சம்பளம் எதுவும் அளிக்கப்படாததால், அலஹாபாத் மற்றும் கொவ்ஷாம்பி ஆகிய நகரங்களில் உள்ள மதரஸா ஆசிரியர்கள் பசிப் பட்டினியால் வாடிவருகின்றனர்.

கடந்த மே மாதம் 2009லிருந்து, 23 அலஹாபாத் மதரஸா அசியர்களுக்கும் 20 கொவ்ஷாம்பி மதரஸா அசியர்களுக்கும் சம்பளம் அளிக்கப்படவில்லை.

இது குறித்து, பல முறை ஆசிரியர்கள் புகார்கள் அளித்தும் no prescription online pharmacy ஒரு பலனும் இல்லை. வெறும் பொய்யான வாக்குகள் தான் அரசு தரப்பிலிருந்து கொடுக்கப்படுகிறது.

ஆசிரியர் முஹம்மத் ஹாரூன் சாகிப் தெரிவிக்கையில், ‘சிறுபான்மை அமைச்சகத்தின் இந்நடவடிக்கைகள் ஆச்சிரியம் அளிப்பதாக தெரிவித்தார். எங்களுக்கு சிறுமான்மைத் துறையிலிருந்து சரியாக சம்பளம் அளிக்கப்பட முடியவில்லை என்றால், எங்கள் மதரஸாக்களை கல்வித்துறைக்கு மாற்றும் படி’ அவர் கேட்டுக் கொண்டார்.

மதரஸா–இ-அரேபியா தலைவர் முஹம்மது ஷமீம் ஹாஷ்மி இது குறித்து தெரிவிக்கையில், இது போன்று நீண்டகாலத்திற்கு சம்பளம் அளிக்கப்படாதது இதுதான் முதல் முறை என்றார்.

மதரஸாக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண மாநில அரசு தாயாராக இல்லை என்பதை இது சுட்டிக்காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Add Comment