தமிழக உள்ளாட்சி தேர்தல்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மதுரை, நெல்லை மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு போட்டி

தமிழக உள்ளாட்சி தேர்தல்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மதுரை, நெல்லை மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு போட்டி

தமிழக உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனிச்சின்னத் தில் போட்டியிடுகிறது. தமி ழகம் முழுவதும் மாநக ராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி உள்ளிட்ட உள் ளாட்சி அமைப்புக்களில் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் இதன் வேட் பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதற்காக 41 மாவட்டங்களுக்கும் தலைமை நிலையத்திலி ருந்து ஏ. மற்றும் பி படி வங்கள் அனுப்பிவைக்கப் பட்டுள்ளன.

மாநகராட்சி மேயர் வேட்பாளர்கள்
மதுரை மாநகராட்சி யில் மேயர் வேட்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் டாக்டர் ஏ.கே. முகைதீன் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய் தார். எம்.பி.பி.எஸ்., எம். எஸ்., எம்.சி.ஹெச். பட்ட தாரியான இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில துணைத் தலை வராவார். மருத்துவ துறையில் நீண்ட அனு பவமும், பொதுநல சேவையில் அதிக ஆர்வமும் மிக்கவர்.

மதுரை மாநகராட்சி ஆணையரிடம் இவர் வேட்புமனு தாக்கல் செய்த போது, மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மௌ லவி பி.கே.என். அப்துல் காதர் ஆலிம், செயலாளர் ஏ.இக்பால் பாஷா, புறநகர் மாவட்ட செயலாளர் எஸ். ஜாகிர் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் பிரமுகர்கள் செயல்வீரர்கள் உடன் சென்றனர்.

திருநெல்வேலி மாநக ராட்சிக்கு மேயர் வேட்பா ளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் buy Viagra online எம்.ஏ. காதர் பீவி இன்று பிற்பகல் மனு தாக்கல் செய்தார். பி.இ. கம்ப்யூட் டர் சயின்ஸ் படித்துள்ள இவர் துபாயில் பன்னாட்டு மென்பொருள் நிறுவன ஆராய்ச்சி பிரிவில் 3ஆண்டுகள் பணியாற்றி யவர்.

இந்திய யூனியன் முஸ் லிம் லீகின் மாவட்ட வர்த் தக அணிச் செயலாளர் பாட்டப்பத்து முஹம்மது அலியின் மகளான இவர் ஷேக் செய்யது அலியின் துணைவியாவார். சேவை மனப்பான்மையும், அறி வாற்றலும் மிக்க இவர் சிறந்த பொதுநல ஊழியர். இவரது வேட்புமனு தாக் கலின்போது நெல்லை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். துராப் ஷா தலை மையில் ஏராளமானோர் உடன் சென்றனர்.

NEWS BY : NALLOORAAN

Add Comment