ஆந்திர தொழில்நுட்ப பொது நுழைவுத் தேர்வில் ஆட்டோ ஓட்டுநர் மகன் முகம்மது கவுஸ் முதலிடம்

பொறியியல், மருத்துவம், விவசாயம் ஆகிய பிரிவுகளின் 2010 ஆம் ஆண்டுக்கான(EAMCET) பொறியியல் பிரிவில் ஆட்டோ ஓட்டுநர் மகன் முகம்மது கவுஸ் ஜனி முதலிடம் பிடித்துள்ளார்.

பொது நுழைவுத் தேர்வு ஆந்திர அரசின் உயர் கல்வி துறை (APSCHE) சார்பாக ஹைதராபாத் ஜே.ஏன்.தி. பல்கலைகழகத்தால் நடத்தப்பட்டது. முதலிடத்தை பிடித்த முகம்மது கவுஸ் 160 க்கு 159 மதிப்பெண் பெற்றார்.
முதலிடத்தை கவுஸ் ஜனியுடன் பாபத்தி பல்லவியும், ஜே.ஜனார்த ரெட்டியும் பகிர்ந்து கொண்டனர்.

சத்யவலு சாய் சுரேஷ் தித்தேஷ்(158) கொன்னேறு கிரண் பாபு யங்கலா லஷ்மிபதி(157), புத்தி ராம் சரண்(156), ஸ்ரீதர் கந்திமல்லா, எம்.வி.எஸ். சாய் ராகவேந்திரா, ஒய். அக்சாய் (155) ஆகியோர் அடுத்த 10௦ இடங்களை பெற்றனர்.

ஜனியின் தகப்பனார் முகம்மது அமீர் ஆட்டோ ஒட்டி ரூ 200 ஐ வருமானமாக ஈட்டி ஒட்டுமொத்த குடும்பத்தையும் நடத்தி வருகின்றார். மேலும் ஜனியின் தாயார் அருகில் உள்ள வீடுகளில் வீட்டு வேலையில் ஈடுபட்டு வருகின்றார். இவர்களது குடும்பம் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகின்றது.

ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ஜனி “எல்லாம் வல்ல இறைவனின் கிருபையால் தான் வெற்றி பெற்றதாகவும், தனது பள்ளிப் படிப்பை தொடர்ந்து முடிக்க இலவசமாக பள்ளியில் online pharmacy no prescription இடம் தந்த நாராயணா சார் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்” என்றார்.

“பணம் எனது படிப்புக்கு தடையாக இருந்தது; இன்று எனக்கு பொருளாதார ரீதியில் உதவ முன்வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்” எனவும், தான் தினமும் 10 மணி நேரம் படித்ததாகவும் கூறியுள்ளார்.

இதனைப் போன்று மருத்துவ தேர்வில் சையது முஸ்தபா காசிமி 160 க்கு 153 மதிப்பெண்கள் பெற்று முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ளார்.

EAMCET என்ற இந்த பொது நுழைவுத் தேர்வு என்பது ஆந்திரா மாநில அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் தொழில் நுட்பம் படிப்பதற்கான அடிப்படை நுழைவுத் தேர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment