கல்யாணவீட்டு சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு..

கல்யாணவீட்டு சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு…சாப்பிடனும் போல இருக்கே என மனம் சில நேரம் ஏங்குவதுண்டு….
எங்கள் ஊரில் கல்யாணம் என்றால் முதலில் நாங்கள் கேட்பது யார் பண்டாரி என்றுதான்…
நம்ம மீத்தினூப்பன் சேவுதுமான் மாமா,
அசன், பொறுப்பு,கோசாமலெப்பை மோதினார் என இவர்கள் எங்கள் திருமணங்களில் சுவை கூட்டியவர்கள்

தெருக்களில் அண்டாவில் வெந்துகொண்டிருக்கும் சோறும்…
மண்பானையில் கொதிக்க கொதிக்க
ஊற்றிவைக்கப்பட்ட கறிக்கொழம்பும்
வாளிகளில் நிரப்பி வைத்திருக்கும்
சாம்பாரும்…நினைக்கையிலே
நாவு சுரக்கும்….தெருவே மணக்கும்….

இன்னைக்கு சாம்பார் பிரமாதம்…
கறிஆனம் டாப்பு என சாப்பாடு முடித்து
கை கழுவிய பின்பும்…இரவு வரை அந்த மணம் கைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும்….

மச்சான், மாப்பிள்ளை, அண்ணன்
தம்பி….என மொத்தமாக நின்று பரிமாறுவதும்..பரிமாறி முடிந்தவுடன்
பண்டாரியிடம் சொல்லி no prescription online pharmacy கறி அதிகமாக வைத்து தனிக்கலம்
வாங்கி சாப்பிடுவதும் அலப்பரிய சுகம் தான்…

அற்புதமான சாப்பாடு தந்ததற்கு எங்கள் பண்டாரிகளுக்கு நாங்கள்
நன்றி சொல்கின்றோம்….

அவர்கள் சமையலின் மணம் இன்னமும் இதயத்தில் கம கம த்துக் கொண்டிருக்கிறது…

அபூபக்கர் சித்திக்

Add Comment