என் மீதான விசாரணை முடிந்ததா, இல்லையா?- தெளிவுபடுத்த சிபிஐக்கு ராசா கோரிக்கை

டெல்லி: என் மீதான விசாரணை முடிந்து விட்டதா, இல்லையா என்பதை சிபிஐ தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று சிபிஐக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கோரிக்கை விடுத்துள்ளார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள புதிய புகார்களையும் அவர் நிராகரித்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராசா. அவர் மீது கடந்த வாரம் திடீரென புதிய புகார்களை சுமத்தியது சிபிஐ. அமைச்சர் பதவி வகித்த ராசா அரசு ஊழியர் என்றவகையில்வருவதால் அவர் மீது நம்பி்க்கை மோசடி குற்றத்தை சாட்டியுள்ளது சிபிஐ. இதற்கு ராசா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நம்பிக்கை மோசடி புகார் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஆயுள் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராசாவின் ஆட்சேபனை குறித்து அவரது வக்கீல் சுஷில் குமார் கூறுகையில், டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட்டில் சிபிஐ கூறும்போது ராசா மற்றும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவரிடமும் விசாரணை நடத்தி முடித்து விட்டதாக கூறியது. ஆனால் தற்போது ராசா மீது புதிய புகார்களைக் கூறியுள்ளது சிபிஐ. கோர்ட்டில் வாதங்கள் முடிவடைந்து விட்டன. அடுத்து குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டியுள்ளது. இந்த நிலையில் சிபிஐ புதிய புகார்களை கூறியிருப்பது வழக்கை தாமதப்படுத்தும் நோக்கம் என்றுதான் Buy cheap Amoxil கருதப்பட வேண்டியுள்ளது. மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாருமே ஜாமீனில் வெளியே வரக் கூடாது என்று சிபிஐ கருதுகிறதோ என்றும் தோன்றுகிறது.

தனது விசாரணையை முடித்து விட்டதாக சிபிஐ கூறும் வரை யாருக்கும் ஜாமீன் கிடைக்க வழியில்லை. எனவே சிபிஐ தனது விசாரணை முடிந்து விட்டதா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.அப்போதுதான் தனது தரப்பு வாதத்தை கோர்ட்டில் தெரிவிக்கப் போவதாக ராசா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் நானும் விசாரணை முடிந்த பின்னரே இந்த வழக்கில் ஆஜராகப் போகிறேன் என்றார் சுஷில் குமார்.

Add Comment