தமிழக காவல்துறையின் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்:

buy Cialis online border=”0″>

தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவு ஏ.டி.ஜி.பி. ராஜேந்திரன் உள்பட காவல்துறை உயர் அதிகாரிகள் 6 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் காலியாக இருந்த உளவுப்பிரிவு ஏ.டி.ஜி.பி. பணியிடத்துக்கு சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டார்.
இதன் பின்னர் படிப்படியாக மாநிலம் முழுவதும் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். குறிப்பாக தி.மு.க.வினர் ஆதரவாக செயல்பட்டதாக கருதப்பட்ட காவல்துறை அதிகாரிகள், முக்கியமான பொறுப்புகளில் இருந்து மாற்றப்பட்டனர்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே இருக்கும் நிலையில், உளவுப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக இருந்த ராஜேந்திரன் அந்த பணியில் இருந்து திடீரென தொழில்நுட்ப பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காலியாக இருக்கும் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. பணியிடத்துக்கு புதிய அதிகாரி விரைவில் நியமிக்கப்படுவார் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை பெருநகர காவல்துறையின் குற்றப்பிரிவு இணை ஆணையராக இருந்த பொன்.மாணிக்கவேல், உளவுத்துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிரிவு 1 டி.ஐ.ஜி. பணியிடத்துக்கு புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் வியாழக்கிழமை தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள எஸ்.பி.க்கள் (அடைப்புக்குள் பழைய பணி): டி.ஜெயச்சந்திரன்-மதுரை மதுவிலக்கு பிரிவு எஸ்.பி. (ஈரோடு மாவட்ட எஸ்.பி.) ஏ.அருண்- மாநில போதைப் பொருள் தடுப்பு பிரிவு எஸ்.பி. (கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.) பன்னீர்செல்வம்-ஈரோடு மாவட்ட எஸ்.பி. (மதுரை மதுவிலக்குப் பிரிவு எஸ்.பி.) பாலசுப்பிரமணியன்-கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. (மாநில போதைப் பொருள் தடுப்பு பிரிவு எஸ்.பி.)

Add Comment