ஸ்பெக்ட்ரம் கடிதம் சர்ச்சை : பிரணாப் – சிதம்பரம் மோதலுக்கு முற்றுப்புள்ளி

புதுடெல்லி : ஸ்பெக்ட்ரம் பிரச்னை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும், ப.சிதம்பரமும் நேற்று சந்தித்தனர். இதன் மூலம், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்தது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு Buy Doxycycline Online No Prescription தொடர்பாக பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த மார்ச் 25ம் தேதி எழுதிய கடிதத்தில்,‘‘ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலத்தில் விற்க 2008ல் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால், ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடந்திருக்கா’‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால், சிதம்பரத்தின் பதவியை பறிக்கும்படி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இந்த சர்ச்சையால் பிரணாப் – சிதம்பரம் இடையே மோதல் ஏற்பட்டது. ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங், நாடு திரும்பியதும் இப்பிரச்னையில் தலையிட்டார். பிரணாப்பும், சிதம்பரமும் அவரை தனித்தனியாக சந்தித்துப் பேசினர். சோனியாவை பிரணாப் 3 முறை சந்தித்தார். சிதம்பரம் சந்திக்கவில்லை.

இந்நிலையில், பிரதமரை பிரணாப் முகர்ஜியும், சிதம்பரமும் நேற்று சந்தித்து பேசினர். முன்னதாக, பிரணாப், ஏ.கே.அந்தோணி, அகமது படேல் ஆகியோரிடம் சோனியா ஆலோசித்தார். இதன் தொடர்ச்சியாக, பிரதமரை பிரணாப் முகர்ஜியும், சிதம்பரமும் சந்தித்து பேசினர். பின்னர், இருவரும் இணைந்து பேட்டி அளித்தனர். அப்போது பிரணாப் வெளியிட்ட அறிக்கையில், ‘‘பிரதமர் அலுவலகத்துக்கு நான் எழுதிய கடிதத்தில் கூறியுள்ள சில கருத்துகள் என்னுடைய கருத்தல்ல.

ஸ்பெக்ட்ரம் தொடர்பாக பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையே நடந்த கருத்து பரிமாற்றத்தின் அடிப்படையில், அதிகாரிகள் குழுதான் இந்த கடிதத்தை தயாரித்தது. அது, பிரதமருக்கு மார்ச் 25ம் தேதி அனுப்பப்பட்டது’’ என்று பிரணாப் கூறியுள்ளார். இதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த சிதம்பரம், ‘‘இந்த கருத்தை நான் ஏற்கிறேன். எங்களை பொருத்தவரை எல்லா பிரச்னையும் முடிந்து விட்டது’’ என்றார்

Add Comment