தே.மு.தி.க. அலுவலகம் சூறை தேர்தலை புறக்கணிக்க முடிவு

கடலூர்: உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக தேமுதிகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு Buy Levitra Online No Prescription ஏற்பட்டுள்ளது. கடலூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு தேமுதிக வேட்பாளராக பேராசிரியர் சண்முகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக தனசேகரனும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையில் தேமுதிகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தல் கூட்டணி ஏற்படுத்தியதால், கடலூர் நகர்மன்ற தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடலூர் தேமுதிக அலுவலகம் முன்பு அக்கட்சியினர் கடந்த இரு தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு அக்கட்சி நிர்வாகிகள் சிலர் கட்சி அலுவலகத்தை உடைத்து சேதப்படுத்தினர். இந்நிலையில் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி கடலூர் முழுவதும் அக்கட்சி தொண்டர்கள் நேற்றுமுன்தினம் இரவு போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

அதில், தேமுதிக தேர்தல் புறக்கணிப்பு என்ற தலைப்பில், ‘முரசை முடக்கி, தொண்டர்கள் இல்லாத சி.பி.எம் கட்சிக்கு கடலூர் நகராட்சியை விற்ற சிவக்கொழுந்துவை வன்மையாக கண்டிக்கிறோம். இவண், கடலூர் நகர தே.மு.தி.க தொண்டர்கள்‘ என குறிப்பிட்டுள்ளனர். கடலூர் மாவட்ட தேமுதிக செயலாளர் மற்றும் பண்ருட்டி எம்எல்ஏவாக சிவக்கொழுந்து உள்ளார். தேமுதிகவினரின் தேர்தல் புறக்கணிப்பு போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Add Comment