தினம் ஒரு குர்ஆன் வசனம்=8

இறை நிராகரிப்பு உள்ளத்தில் தோற்றுவிக்கும் கேள்விகள்!

இன்னும்; “(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப்போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகின்றவர்களா?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள். (நபியே!) நீர் கூறும்; “நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள். “அல்லது மிகப் பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்.” (எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்). Buy cheap Ampicillin “எங்களை எவன் (மறுமுறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்?” என்று அவர்கள் கேட்பார்கள். “உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்!” என்று (நபியே!) நீர் கூறும். அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். “அது வெகு சீக்கிரத்திலும் ஏற்படலாம்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 17:49, 50, 51)

Add Comment