நகராட்சி தலைவர் தேர்தலில் வெற்றி யாருக்கு ?

உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்து கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில்,அனல் பறக்கும் பிரச்சாரங்களுக்கு இடையில் கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் வெற்றி வாய்ப்பு யாருக்கு பிரகாசம்,மக்களின் மனநிலை எனவென்பதை சற்று அலசுவோம்.

சட்டமன்ற தேர்தல் முடிந்து சில மாதங்களேயான நிலையில் உள்ளாட்சி தேர்தலில் மக்களின் மன நிலை அறிய ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைத்து கட்சிகளும் உற்சாகத்துடன் களத்தில் உள்ளன.

சட்டமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளின் கூட்டணியுடன் போட்டியிட்ட அனைத்து கட்சிகளும் இந்த முறை தனியாக களத்தில் உள்ளன.

கடையநல்லூரை பொறுத்த வரை தி.மு.க மற்றும் அ.தி.மு.க தவிர மற்ற கட்சிகள் தங்கள் தனிப்பட்ட பலத்தை பரிசோதிக்க களத்தில் உள்ளதால்,போட்டி இரு பெரிய கட்சியான தி.மு.க மற்றும் அ.தி.மு.க விற்கு இடையேதான் என்பதில் சந்தேகம் இல்லை.

முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் நகராட்சி.ஆகையால் தி.மு.க வின் சார்பில் களத்தில் இஸ்லாமியரான திருமதி.சைபுன்னிஷா.இவர் ஒரு எம்.ஏ பட்டதாரி,சமுதாயத்தில் நன்கு அறிமுகமான குடும்பத்தில் உள்ளவர்,முஸ்லீம்களின் செல்வாக்கு மற்றும் தி.மு.காவின் பலம் என்ற நிலையில் வெற்றியை எதிர்நோக்கி களத்தில் உள்ளார்.

அ.தி.மு.க சார்பில் பட்டதாரியான திருமதி. முத்துலட்சுமி.புளியங்குடி கல்லூரியில் ஆசரியராக பணியாற்றி வருபவர்.ஆளும் கட்சி மற்றும்  சமுதாய ஓட்டுக்கள்  என்ற பலத்துடன் களத்தில் உள்ளார்.

முஸ்லீம் சமுதாய மக்களின் வாக்கு சிதறாமல் தி.மு.க விற்கு விழுந்தால் வெற்றி எங்களுக்கே என்று தேர்தல் களத்தில் தி.மு.காவின் உடன்பிறப்புக்கள் சுறுசுறுப்புடன் உள்ளனர்.

ஆளும் கட்சி மற்றும் அமைச்சரை கொண்டுள்ள தொகுதி என்ற மிகப்பெரிய பலத்துடன் களத்தில் உற்சாகத்துடன் அ.தி.மு.காவினர் ஈடுபட்டுள்ளனர்

ஜெயிக்க போவது யார் என்பதை முடிவு செய்வது மக்கள்தான்.

உங்களின் கருத்துக்களை இங்கு ஓட்டு மூலம் தெரியப்படுத்துங்கள்.

கடையநல்லூர் .org யின் முகப்பில்buy Doxycycline online #ff0000;”> POLL என்ற பகுதியில் உங்களின் வாக்குகளை தெரியப்படுத்துங்கள்.

Add Comment