நிச்சயிக்கப்பட்ட மேயர் வேட்பாளர் ஓட்டம்; துரத்தி துரத்தி புது வேட்பாளரை பிடித்த தேமுதிகவினர்

நெல்லை மாநகர மேயர் வேட்பாளராக தேமுதிகவின் சார்பில் சிந்துபூந்துரையைச் சேர்ந்த சீதாலட்சுமி விருப்பமனு கொடுத்தார்.  வேட்பாளர் தேர்வின் போது அக்கட்சியின் மாவட்ட பொருப்பாளர், சீதாலட்சுமியை மேயர் வேட்பாளராக அறிவித்தார்.

நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய சீதாலட்சுமி வருவார் என்று பாதையிலேயே கண்வைத்து காத்திருந்தனர் தேமுதிகவினர்.  ஆனால் திடீரென்று நான் போட்டியிட முடியாது என்று தகவல் வந்து வந்ததால் தேமுதிகவினர் பரபரப்பாகினர்.

சீதாலட்சுமியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய பிரேமலதாவிஜயகாந்த் நெல்லை வரும் நேரத்தில் வேட்பாளர் மாயமானது பரபரக்க செய்துவிட்டது.

உடனே, சூட்டோடு சூடாக தேமுதிகவின் மகளிர் அணி நிர்வாகி அமுதாவை தேர்வு செய்து அவரை வேட்புமனு தாக்கலுக்கு  அழைத்தனர்.

என்னால் போட்டி போட முடியாது.   ஆளை விடுங்க சாமி என்று அவரும் திடீரென்று ஒதுங்கிவிட்டார்.

 

Ampicillin online align=”justify”>
வேட்புமனு தாக்கல் முடிவடைவதற்கு சில மணி நேரங்களே இருந்த நிலையில் வேட்பாளர் கிடைக்காமல் போன விசயம் வெளியே தெரிந்தால் கட்சிக்குத்தான் பிரச்சனை வந்து சேரும் என்று கருதினர் தேமுதிகவினர்.

இதனிடையே பிரேமலதா விஜயகாந்தும் இந்த தகவலால் அதிரிச்சியானார்.  திடீரென கட்சியினர் கண்ணாம்மாள் என்பவரை பிடித்து அவரை சமாதானப்படுத்தி கடைசி நேரத்தில் வேட்புமனு தாக்கல்செய்ய வைத்தனர்.

அதன்பின்னர்  பிரேமலதா,   கண்ணாமாளை ஆதரித்து டவுன், ஜங்சன் மற்றும் மேலப்பாளையம் மூன்று பகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய அங்கு கூட்டம் அவ்வளவாக திரளாததால்  ஒரு சில நிமிடங்களே பேசிவிட்டு நெல்லையை விட்டு கிளம்பினார் பிரேமலதா.

Add Comment