உள்ளாட்சி தேர்தல் நெல்லை மாவட்டத்தில் 595 பேர் போட்டியின்றி தேர்வாகின்றனர் 19,421 மனுக்கள் ஏற்பு

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 5219 பதவிகளுக்கு 19,771 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அந்தந்த உள்ளாட்சிகளில் நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட பஞ்சாயத்து வார்டில் 4 பேரின் வேட்பு மனுக்களும், 19 பஞ்சாயத்து யூனியன்களில் கவுன்சிலர் பதவிக்கு 27 வேட்பு மனுக்களும், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு மனு தாக்கல் செய்த 37 பேரின் வேட்பு மனுக்களும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 202 வேட்பு மனுக்களும், மாநகராட்சி மேயருக்கு 2ம், மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு 8ம், நகராட்சி தலைவர்களுக்கு 3ம், நகராட்சி கவுன்சிலர்களுக்கு 5ம், டவுன் பஞ்சாயத்து தலைவர்களுக்கு 9ம், டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்களுக்கு 40ம் என மொத்தம் 337 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
13 பேரின் மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 19ஆயிரத்து 421 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. வரும் 3ம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
நெல்லை: நெல்லை மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 595 பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் இவர்கள் போட்டியின்றி தேர்வாகலாம் என தெரிகிறது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகராட்சி, 7 நகராட்சிகள், 36 டவுன் பஞ்சாயத்துகள், 26 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள், 19 பஞ்சாயத்து யூனியன்கள், 425 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகிய 5 ஆயிரத்து 219 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கி 29ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 19 ஆயிரத்து 771 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். பத்தமடை டவுன் பஞ்சாயத்து 5, 11 வார்டுகள், ராயகிரி டவுன் பஞ். 1, 2, 15 வார்டுகள், சுந்தரபாண்டியபுரம் டவுன் பஞ்சாயத்து 1, 9, 10, 12 வார்டுகள், மூலக்கரைப் பட்டி 8வது வார்டு ஆகியவற்றுக்கு ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இதேபோல கடையநல்லூர் நகராட்சி 22வது வார்டு, புளியங்குடி நகராட்சி 4வது வார்டு, ஆலங்குளம் யூனியன் ஆர். நவநீதகிருஷ்ணபுரம், வாசுதேவநல்லூர் யூனியன் அரியூர், பஞ்.தலைவர் பதவி ஆகியவற்றிற்கு ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர்.
கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கு வாசுதேவநல்லூர் யூனியனில் 36 பேரும், சங்கரன்கோவில் யூனியனில் 27 பேரும், மேலநீலிதநல்லூர், கடையம் யூனியனில் தலா 25 பேரும், குருவிகுளத்தில் 60 பேரும்,
கடையநல்லூரில் 16 பேரும், செங்கோட்டையில் இருவரும், தென்காசியில் 4 பேரும், கீழப்பாவூரில் 17 பேரும், ஆலங் குளத்தில் 50 பேரும், மானூ ரில் 72 பேரும், அம்பையில் 15 பேரும், பாப்பாக்குடியில் 24 பேரும், சேரன்மகாதேவியில் 12 பேரும், பாளையங்கோட்டையில் 34 பேரும், களக்காட்டில் 46 பேரும், நாங்குநேரியில் 61 பேரும், வள்ளியூரில் 24 பேரும், ராதாபுரத்தில் 31 பேருமாக 595 பதவிகளுக்கு ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த 595 பேரும் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெறாத பட்சத்தில் போட்டியின்றி தேர்வு Doxycycline online செய்யப்படுவர். இதில் 581 பேர் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் ஆவர்.
அக்.3ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டி யல் வெளியிட்ட பின்னர் இது தெரியவரும்.

Add Comment