தெலங்கானா விவகாரம் சோனியாவிடம் ஆசாத் அறிக்கை

புதுடெல்லி : தெலங்கானா விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ, Buy Levitra எம்.எல்.சிக்களிடம் கருத்து கேட்ட மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் கட்சி தலைவர் சோனியாவிடம் அறிக்கை கொடுத்தார். தெலங்கானா தனி மாநில கோரிக்கை தொடர்பாக காங்கிரசாரின் கருத்துகளை அறியும் பணி காங்கிரஸ் மூத்த தலைவ ரும், மத்திய சுகாதார துறை அமைச்சருமான குலாம் நபி ஆசாத்திடம் கடந்த ஜூலையில் ஒப்படைக்கப்பட்டது. ஆந்திராவுக்கு பலமுறை சென்ற ஆசாத், அங்கு காங்கிரசை சேர்ந்த அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ, எம்.எல்.சி.க் களிடம் தெலங்கானா விவகாரம் பற்றி ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டறிந்தார்.

அப்போது, தெலங்கானா பகுதியை சேர்ந்தவர்கள் தனி மாநிலம் வேண்டும் என்பதை வலியுறுத்தினர். ஆனால், ராயலசீமா, கடலோர ஆந்திராவை சேர்ந்தவர்கள் ஆந்திராவை பிரிக்க கூடாது எனறு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை குலாம் நபி ஆசாத் நேற்று சந்தித்தார். அப்போது, தெலங்கானா விவகாரத்தில் காங்கிரசாரின் கருத்துகள் அடங்கிய தனது அறிக்கையை ஆசாத் கொடுத்தார்.

சம்பளம் நிறுத்தம்: தெலங்கானா பகுதியை சேர்ந்த அரசு ஊழியர்கள் கடந்த 18 நாட்களாக தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் சம்பளத்தை நிறுத்திவைக்க ஆந்திரா அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து ஆந்திரா மாநில நிதி அமைச்சர் ராமநாராயண ரெட்டி ஐதராபாத்தில் நேற்று கூறுகையில், ÔÔபோராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் 12 நாட்களுக்கான சம்பளம் மட்டுமே தரப்படும். வேலைக்கு வந்த ஊழியர்களுக்கு முழு சம்பளமும் கிடைக்கும்ÕÕ என்றார்.

Add Comment