கடையநல்லூர் 22 வார்டில் போட்டியின்றி தேர்வாகும் தி.மு.க. வேட்பாளர்

கடையநல்லூர் 22 வார்டில் போட்டியின்றி தேர்வாகும் தி.மு.க. வேட்பாளர்

Buy cheap Bactrim style=”text-align: justify;”>கடையநல்லூர் நகராட்சியில், 22வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த ராசையா தேர்வாகிறார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் வெற்றிக் கனியைப் பறிக்கவுள்ளார்.

ராசையாவுக்கு எதிராகப் போட்டியிட அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் திடீரென தலைமறைவாகி விட்டதால் அந்தக் கட்சியினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடையநல்லூர் நகராட்சியில் தலைவர் பதவிக்கு மட்டுமின்றி கவுன்சிலர் பதவிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. தலைவர் மற்றும் 33 கவுன்சிலர் பதவிக்கும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்தன.

இந்நிலையில் 22வது வார்டில் தி.மு.க. சார்பில் தற்போதைய கவுன்சிலர் ராசையா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அந்த வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக மாரியப்பன் என்பவர் அறிவிக்கப்பட்டார். ஆனால் வேட்புமனு கடைசி நாளான நேற்று 3 மணி வரை அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட மாரியப்பனோ, வேறு வேட்பாளர்களோ வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் தி.மு.க. வேட்பாளர் ராசையா, போட்டியின்றி தேர்வு செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வேட்பு மனு பரீசிலனைக்கு பிறகு இவர் முறையாக கவுன்சிலராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தலைமறைவானது அ.தி.மு.க.வினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சீட் கிடைக்காததால் அ.தி.மு.க.வில் 4 வார்டு செயலாளர் சின்னமாரிப்பாண்டியன் பா.ஜ.க. சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதிர்ச்சி நீங்காத நிலையில் 22வது வார்டில் அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மாரியப்பன் வேட்புமனு தாக்கல் செய்யாதது அதிமுகவினரை கலங்கடித்துள்ளது.

Add Comment