சர்ச்சையை கடந்து சாதிக்குமா பிரான்ஸ்!: இன்று தென் ஆப்ரிக்காவுடன் மோதல்

பிரான்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் இன்று தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது. இதில் சிறப்பான வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில், அணியில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளை கடந்து பிரான்ஸ் சாதிக்க வேண்டும்.
தென் ஆப்ரிக்காவில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதல் “ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் அணி, திணறல் துவக்கம் கண்டது. முதல் இரண்டு போட்டிகளில் ஒன்றில் “டிராவும்’ மற்றொன்றில் தோல்வியும் சந்தித்தது. இதுவரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
இந்நிலையில் இன்று தென் ஆப்ரிக்காவுடன், சிறப்பான வெற்றி பெற்றால் மட்டுமே, அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். இந்த போட்டியில் கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில் அணி வீரர்களுக்கும், பயிற்சியாளருக்கும் இடையே, திடீரென பிரச்னைகள் தலைதூக்கியுள்ளது.
பயிற்சி புறக்கணிப்பு:
இம்முறை மெக்சிகோவுக்கு எதிரான போட்டியின் போது, பயிற்சியாளர் ரேமண்ட் டொமேனக்கை, முன்னணி வீரர் நிகோலஸ் அனல்கா, தகாத வார்த்தைகளால் திட்டினார். இதையடுத்து பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு அனெல்காவை உடனடியாக அணியில் இருந்து நீக்கியது. இதற்கு சக வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கேப்டன் பாட்ரிஸ் எவ்ரா தலைமையில் பயிற்சியை புறக்கணித்தனர். பின் பிரானஸ் அதிபர் சர்கோசி தலையிட்டு பிரச்னைக்கு buy Ampicillin online தீர்வு கண்டார். ஒருவழியாக சமரசம் ஏற்படவே, நேற்று வீரர்கள் பயிற்சிக்கு திரும்பினர்.
இப்படிப்பட்ட சர்ச்சைகளை கடந்து பிரான்ஸ் அணி, இன்று தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு தியரி ஹென்றி, மலூடா போன்ற முன்னணி வீரர்கள் கைகொடுக்க வேண்டும்.
பிரான்சிற்கு அவமானம்:
அணியில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு, பிரான்ஸ் “மீடியா’ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து “லீ பாரிசியன்’ என்ற பத்திரிகை முன்பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,””தற்போதைய பிரான்ஸ் அணி, அனைவருக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. அனெல்காவுக்கு ஆதரவு தெரிவித்து, பயிற்சியை வீணாக புறக்கணிக்கின்றனர். இதனால் இளம் சிறுவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது,”என குறிப்பிட்டுள்ளது. இதே கருத்தை லிபரேஷன் போன்ற முன்னணி பத்திரிகைகளும் வெளியிட்டுள்ளன.

Add Comment