உலக கோப்பை கால்பந்து: சிலி கலக்கல் வெற்றி

உலக கோப்பை லீக் போட்டியில் சிலி அணி, சுவிட்சர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது.
தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று “எச்’ பிரிவில் நடந்த லீக் போட்டியில் உலக ரேங்கிங் பட்டியலில் 18வது இடத்தில் இருக்கும் சிலி அணி, சுவிட்சர்லாந்தை(24வது இடம்) எதிர்கொண்டது.
10 வீரர்களுடன்…:
சிலி வீரர்கள் துவக்கத்திலேயே துடிப்பாக ஆடினர். கடந்த போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி பரபரப்பு ஏற்படுத்திய சுவிட்சர்லாந்து அணிக்கு இம்முறை அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் வெலன் பெஹ்ராமி தனது முழங்கையால் சிலி வீரர் அர்டுரோ விடாலின் முகத்தில் தாக்கினார். இதனை கவனித்த சவுதி அரேபிய நடுவர் கலில், “ரெட் கார்டு’ காட்டி பெஹ்ராமியை வெளியேற்றினார். இதையடுத்து சுவிட்சர்லாந்து அணி 10 பேருடன் விளையாட நேர்ந்தது. முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்க இயலவில்லை.
சிலி முன்னிலை:
இரண்டாவது பாதியில் சிலி வீரர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் மார்க் கொன்சாலஸ், பந்தை தலையால் முட்டி அருமையான கோல் அடித்தார். இதற்கு சுவிட்சர்லாந்து அணியால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இறுதியில் சிலி அணி 1-0 என வெற்றி பெற்றது. ஏற்கனவே ஹோண்டுராசை வீழ்த்திய சிலி அணி, காலிறுதிக்கு முந்தைய “ரவுண்ட-16′ சுற்றுக்கு முன்னேறுகிறது.
“சுவிஸ்’ சாதனை:
இப்போட்டியின் 74வது நிமிடம் வரை எதிரணியை கோல் அடிக்க விடவில்லை சுவிட்சர்லாந்து. இதன் மூலம் உலக கோப்பை அரங்கில் Buy Cialis 559 நிமிடங்கள் வரை தனக்கு எதிராக கோல் பெறாமல் சாதனை படைத்தது. இதற்கு முன் இத்தாலி அணி 550 நிமிடங்கள் வரை கோல் பெறவில்லை.

Add Comment