வேலைவாய்ப்பு…

இந்தியக் கடற்படையில் அதிகாரி வேலை
இந்தியக் கடற்படையில் குறுகிய கால பணியின் அடிப்படையில் நிர்வாக பிரிவில் அதிகாரியாக பணிபுரிய  திருமணமாகாத இந்தியக் குடிமகன்களிடமிருந்து (ஆண்கள்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு வரும் ஜூலை -2012 முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
பதவியின் பெயர்: எக்ஸிகியூட்டிவ் பிரான்ச்(ஜெனரல் சர்வீஸ்) அண்டு டெக்னிக்கல் பிரான்ச் ஆப் த இந்தியன் நேவி.
வயதுவரம்பு: டெக்னிக்கல் ஜெனரல் சர்வீஸ், சப்மரைன் கேடர் அண்டு எக்ஸிகியூட்டில்(ஜிஎஸ்) கேடர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 19 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். நேவல் ஆர்க்கிடெக்சர் கேடரில் விண்ணப்பிப்பவர்களுக்கு குறைந்தபட்சமாக 21 வயது முதல் 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தற்கான ஒரு பிரின்ட்-அவுட் ஒன்றை எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப உறையின் மேல், ONLINE ROLL NO………….APPLICATION FOR SSCX(GS)/TECHNICAL BRANCH (E/L/SM)- JUL2012 COURSE Qualification….Percentage—– என்று மறக்காமல் குறிப்பிட்டு பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய  முகவரி:
Post BoX NO.04,
Nirman Bhawan,
New Delhi -110011
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.10.2011
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி தேதி: 12.10.2011
மேலும் விவரங்கள் அறிய www.nausena_bharti.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பி.இ., படித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் என்ஜினீயர் பதவிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: என்ஜினீயர்
காலியிடங்கள்: 225
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரிக்கல்,மெட்டாலர்ஜி, இன்ஸ்ட்ருமென்டேஷன், கெமிக்கல் போன்ற பிரிவுகளில் என்ஜினீயரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தகுதியுள்ளவர்கள் கேட்-2012 தேர்வை எழுத வேண்டும்.
கேட்-2012 தேர்வு பற்றிய விவரங்கள் அனைத்தையும் பெறhttp://gate.iitd.ac.in/GATE  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
கேட்-2012 தேர்வு எழுதுபவர்கள் அதற்கான பதிவு எண்ணைக் கொண்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கேட்-2012 தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி:17.10.2011
கேட் மண்டல அலுவலகத்திற்கு பிரின்ட்-அவுட் அனுப்ப கடைசி தேதி:24.10.2011
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.01.2012
மேலும் விவரங்களை அறிய www.iocl.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
டிப்ளமோ படித்தவர்களுக்கு இரும்பு தொழிற்சாலையில் வேலை
ஜார்க்கண்டில் உள்ள பொக்காரோ இரும்புத் தொழிற்சாலை ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: ஆபரேட்டர்-கம்-டெக்னீசியன்(ஒசிடிடி) டிரெய்னீ
காலியிடங்கள்: 157
வயதுவரம்பு: குறைந்தபட்சமாக 18 வயதில் இருந்து அதிகபட்சமாக 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெட்டாலர்ஜி என்ஜினீயரிங் போன்ற பிரிவுகளில் டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.250. (எஸ்சி., எஸ்டி.பிரிவினருக்கு ரூ.50 மட்டும்) SAIL Bokaro Steel Plant என்ற பெயரில் பொக்காரோ ஸ்டீல் சிட்டியில் செலுத்தும் வகையில் டி.டி யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Advertiser,
Post Bag No.52,
Head Post Office.
Bokaro Steel City,
Jharkhant – 827001.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 08.10.2011
மேலும் விவரங்கள் அறிய http://sail.shine.com/media/documents/home/website Advt OTT.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
டிப்ளமோ படித்தவர்களுக்கு நேஷனல் தெர்மல் பவர் லிமிடெட் நிறுவனத்தில் என்ஜினீயர் வேலை
 நேஷனல் தெர்மல் பவர் லிமிடெட்(என்.டி.பி.சி.) நிறுவனத்தில் ஏற்ப்ட்டுள்ள டிரெய்னீ பதவிக்கான காலியிடங்களை நிரப்ப டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..
பதவின் பெயர்: டிப்ளமோ என்ஜினீயர் டிரெய்னீ
கல்வித் தகுதி: எலக்ட்ரிக்கல், எல்க்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ்,  மெக்கானிக்கல்,  சிவில், இன்ஸ்ட்ருமென்டேஷன்,எலக்ட்ரானிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகளில் டிப்ளமோவில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் Buy Ampicillin தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. பொது மற்றும் ஒபிசி பிரிவினர் இணையதள்த்தில் கொடுக்கப்பட்டுள்ள சலானை பூர்த்தி செய்து செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.10.2011
மேலும் தகவல்கள் பெற http://www.ntpccareers.netஎன்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Add Comment