ஸ்பெயின் அணி அசத்தல் வெற்றி: வெளியேறியது ஹோன்டுராஸ்

ஹோன்டுராஸ் அணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில், ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றான “ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டது. தொடர்ந்து இரண்டு போட்டியில் தோல்வி கண்ட ஹோன்டுராஸ் அணி வெளியேறியது.

தென் ஆப்ரிக்காவில், 19வது “பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நேற்று ஜோகனஸ்பர்க், எல்லீஸ் பார்க் மைதானத்தில் நடந்த, “எச் பிரிவு லீக் போட்டியில் உலக ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் 2வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணி, ஹோன்டுராஸ் (“நம்பர்-38) அணியை எதிர்கொண்டது.

கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய ஸ்பெயின் அணி, போட்டியின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா, ஒரு சூப்பர் கோல் அடித்து நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து போராடிய ஹோன்டுராஸ் அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் ஸ்பெயின் அணி 1-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கு, டேவிட் வில்லா 51வது நிமிடத்தில் 2வது கோல் அடித்து அசத்தினார். இருப்பினும் ஸ்பெயின் அணியினர் தங்களுக்கு கிடைத்த “கார்னர் கிக் வாய்ப்புகளை வீணடித்தனர். இந்நிலையில் 62வது நிமிடத்தில் கிடைத்த “பெனால்டி கிக் வாய்ப்பை வீணடித்ததன்மூலம் டேவிட் வில்லா, Buy Ampicillin தனது “ஹாட்ரிக் கோல் வாய்ப்பை கோட்டைவிட்டார். கடைசி வரை போராடிய ஹோன்டுராஸ் அணியினரால், ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் “ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டது. ஆட்டநாயகனாக டேவிட் வில்லா தேர்வு செய்யப்பட்டார்.

சுவிட்சர்லாந்து அணிக்கு எதிராக தோல்வி கண்ட ஸ்பெயின் அணி, நேற்று ஹோன்டுராஸ் அணியை வீழ்த்தி 3 புள்ளிகள் பெற்றது. ஸ்பெயின் அணி அடுத்த சுற்றான “ரவுண்ட் ஆப் 16” சுற்றுக்கு முன்னேற, வரும் 25ம் தேதி நடக்கும் சிலி அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை தோல்வி அடைந்தாலோ அல்லது “டிரா செய்தாலோ, சுவிட்சர்லாந்து-ஹோன்டுராஸ் அணிகள் மோதும் போட்டியின் முடிவை பொறுத்து, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு முடிவு செய்யப்படும்.

Add Comment