கடாபியின் மகனை ஒப்படைக்க மாட்டோம் என சர்வதேச போலீசாருடன் நைஜீரியா பிடிவாதம்

லிபியா தலைநகரை போராட்டக்காரர்கள் பிடித்த உடன், சர்வாதிகாரி கடாபியின் 3-வது மகன் சாதி, நைஜீரியாவுக்கு தப்பிஓடி விட்டார். அங்கு நைஜீரிய அரசின் பாதுகாப்பில் இருக்கிறார். அவருக்கு எதிராக லிபியா இடைக்கால அரசு கைது வாரண்டு பிறப்பித்துள்ளது. அவரை கண்டுபிடிக்க உதவுமாறு சர்வதேச போலீஸ், அனைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும், சாதியை லிபியாவிடம் இப்போதைக்கு ஒப்படைக்க மாட்டோம் என்று நைஜீரிய பிரதமர் பிரிஜி ரபினி நேற்று அறிவித்தார். லிபியாவில், நேர்மையான விசாரணை நடப்பதற்கான சூழ்நிலை இல்லை என்று அவர் கூறினார். இதற்கிடையே, கடாபியின் செய்தித்தொடர்பாளர் மூசா இப்ராகிம் பிடிபட்டு இருப்பதாக லிபியா இடைக்கால அரசு கூறியுள்ளது.

Cialis No Prescription

Add Comment