மாப்பிள்ளை பார்த்தால் காதல் கணவருடன் இளம்பெண் ஓட்டம்

திண்டுக்கல் மாவட்டம், பெகாம்பூர் பூச்சிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்யூந்தவர் கருப்பண்ணன். இவரது மகள் சித்ராதேவி (வயது 23). இவர் ஆசிரியர் பயிற்சி முடித்து Buy Cialis விட்டு தற்போது அஞ்சல் வழியில் பி.எஸ்.சி படித்து வருகிறார்.

 

இவரும், துறைழூர் தாலுகா கொட்டைழூர் கிராமத்தை சேர்யூந்த விவேக்குமார் (23) என்பவரும் லால்குடி மாந்துறையில் ஒரு கல்லூரியில் படிக்கும் போது தீவிரமாக காதலித்து வந்தனர். இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 8 5 11 ந் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் தனித்தனியே அவரவர் பெற்றோருடன் கடந்த சில மாதமாக வசித்து வந்தனர்.

விவேக்குமார் அஞ்சல் வழியில் தற்போது பி.ஏ. படித்து வருகிறார். இந்த நிலையில் சித்ராதேவிக்கு அவருடைய பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதனால் பயந்து போன சித்ராதேவி கடந்த 27 ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி விவேக்குமாரை தேடி சென்றார்.

பின்னர் பாதுகாப்பு கேட்டு விவேக்குமாருடன் சித்ராதேவி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் கலைவாணியிடம் தஞ்சமடைந்தனர். இருவரின் பெற்றோரையும் அழைத்து போலீசார் பேசியதில் சித்ராதேவியின் பெற்றோர் மகளின் திருமணத்தை ஏற்க மறுத்து விட்டனர். விவேக்குமார் தனது காதல் மனைவியை வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதாக உறுதி கூறி தனது பெற்றோரின் சம்மதத்துடன் அழைத்து சென்றார்.

Add Comment